பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 39

திருமூலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்ற்ாகத் தமிழ் செய்யுமாறே என்று பாடினார். கம்பன் ‘முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ என்றான். திருவாசகத் தேன் பருகத்தந்த மாணிக்கவாசகர் கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழ்’ என்றார். தமிழ் நீசபாஷையாகவும், வடமொழி, தேவடாஷையாகவும், மொழிப்பண்டிதர்களால் கருதப்பெற்ற காலக் கட்டத்தில் தோன்றிய வள்ளலார் பெரு மறைப்பையும், போதுபோக்கையும், உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட் டாது, பயிலு தற்கு ம், அறிதற் கும் மிகவும் இலே சுடைய தாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்லியை இலேசில் அறிவிப்பதாய், திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினிர் என்று ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறார். வேதநாயகம் பிள்ளை, தனது பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில், “தாய் மொழிப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு அறிகுறி” என்று தெளிவாக்கினார். பாரதியார் வானம் அளந்த தமிழ் என்றார். பாரதிதாசன் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று கூறியதோடு, “சலுகை போனால் போகட்டும்; அலுவல் போனால் போகட்டும்; தலைமுறை கோடிகண்ட என் தமிழ் விடுதலை ஆகட்டும் “என்று இப்போதைய எழுத்தாளர்களை மனதில் வைத்து பாடியிருக்கிறார்.

ஆனால், நமது தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் தாய் மொழியைப் பற்றி நினைப்பதே இல்லை. இதனை ஒற்றுப்பிழை இலக்கணப் பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்றும் தோன்றுவ தில்லை. மண்வாசனைத் தமிழில்கூட பேசுவதற்கே வெட்கப்பட வேண்டிய ஆபாச வார்த்தைகளை சரமாரியாகக் கலக்கிறார்கள். நம்மைப் போல் நமது எழுத்துக்கும் ஆடைகட்ட வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். படைப்புகளுக்கும் ஆங்கிலத் திலேயே தலைப்பு வைக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்களில் ஒருவர் இறந்தால் அந்த இறப்பு சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அங்க லாய் க் கி றார் க ள். சமூக ம் தங்க ைள நேசிப்பவர்களையே நிரந்தரமாக நேசிக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

புறக்கணிப்பு தீர்வாகுமா? என்றாலும், தமிழ் குடிமகன் அவர்கள் விடுத்துள்ள