பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 45

கொடுத்த ஒவ்வொரு கிலோ அரிசியிலும் கால் கிலோ குறைக்கப்பட்டதாம். கண்ணுக்குத் தெரிந்து மண்ணெண்ணெய் வைத்துக் கொண்டே இல்லை என்றார்களாம் எண்ணெய் இல்லாமல் எப்படி சமைப்பது என்பது அவள் பிரச்சினை உடனே நான் அவங்களைப் போய் ஒரு அதட்டுப் போடும்மா என்றேன். அதற்கு அவள் உனக்கென்ன சொல்லி ட்டே... அவன் போலீஸ்ல என்னை பிடிச்சுக் கொடுத்தால், நான் செய்ய முடியும் என்று திருப்பிக் கேட்டாள். சிறிது சிந்தித்துவிட்டு, என்னோடு அந்தக் கடைக்கு வரும்படியும் நானே அந்த அம்மாவிற்கு நியாயம் கேட்பதாகவும் குறிப்பிட்டேன். இதற்கும் சூடுபட்ட பூனையைப்போல் ‘ஒனக்கென்ன இப்போ கத்திட்டு அப்பாலே எங்கயோ போய்டுவே. வாரத்திற்கு ரெண்டுவாட்டி நான் இந்தக் கடைக்கு வந்தாகணும். இன்னும் அரிசியைக் குறைப்பான், இல்லாட்டி கார்டுல கோளாறு கண்டுபிடிப்பான் என்று அழாதக் குறையாகச் சொன்னாள்.

இப்படிப்பட்ட போலீஸ் பயமும், உள்ளதும் போய்விடும் என்னும் முன்யோசனையும் இந்த மக்களைத் தவிர்க்கமுடியாத அடிமைத்தனத்தில் தள்ளிவிடுகிறது. பொதுவாக கிராமப் பகுதிகளில் போலீஸ் இன்பெக்டர், தாசில்தார், ஒப்பந்தகாரர்கள், தனியார் பள்ளிக் கூட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பெரும்பாலான குட்டி அரசியல் தலைவர்கள் ஒரு குடையில் நிற்பார்கள். கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்களே இந்தக் குடையைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள். இத்தகைய அதிகாரக் கூட்டணிக்கு எதிராக சாதாரண மக்கள் எதுவும் செய்ய இயலாது. இவர்களுக்கு அரசாங்கத்தின் தெரிந்த முகம் கிராம நிர்வாக அதிகாரியும், போலீஸ்ஏட்டுந்தான். இவர்களே இவர்களின் அரசாங்கம். ஒன்று இந்த லோக்கல் அரசாங்கத்திடம் கைகட்டி மெய்பதைத்து நிற்கவேண்டும் அல்லது இவர்களை ஆட்டிப் படைக்கும் தொகுதி அல்லது பகுதி கூட்டணியிடம் தஞ்சம் ஆகவேண்டும். இப்படிப்பட்ட சூழலி ல் ஒரு குடிமகனின் சுயமரியாதை லஞ் சலாவண்ய அரசாங்கவர்க்கத்தால் கரையான்கள் போல் அரிக்கப்படுகிறது.

இப்படிக் குறிப்பிடுவதால் அனைத்து அரசியல் ஊழியர்களும் கரைபட்டவர்கள் என்று சொல்லவரவில்லை. பல இடது சாரி அரசு ஊழியர் சங்கங்களுடன் எனக்கு தொடர்பு உண்டு. இதன் நிர்வாகிகள் அப்பழுக்கற்றவர்கள், ஆனாலும் இவர் க ைள யும் மீறி பா தி ப் பேர் லஞ்சக்குப்பையில்தான் புரளுகிறார்கள்.