சு. சமுத்திரம்
49
தொகை கணக்குப்படி தமிழகத்தில் 350 சாதிகள் உள்ளன. இவற்றின் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் ஏராளமாக உண்டு.
தமிழக சமூக இலக்கிய வரலாற்றை அலசினால் சாதியமே மேலோங்கி இருக்கிறது. சங்ககாலத்தில் மட்டுமே சாதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். இதைத் தவிர்த்த பின்னய காலத்தில் சிற்சில இடைவேளைக் காலங்களோடு சாதியப் பிரிவுகளே ஆதிக்கம் செலுத்தி உள்ளன. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் ஏதாவது தப்பு செய்தால், அந்த சாதியையே வெறுப்பது பிறசாதிகளின் அன்றாடக் கடமையாக இருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தில் ஒரு பொற்கொல்லன் தனது திருட்டிற்கு, கோவலன் மீது பழி போட்டு மதுரையே எரிவதற்கு காரணமாக இருந்தானாம். இதற்காக, ஆண்டுதோறும் கண்ணகி விழாவில் ஆயிரம் பொற்கொல்லர்கள் பலியிடப்பட்ட மாநிலம் இந்த மாநிலந்தான்.
18ஆம் நூற்றாண்டில் பறையர் குலமக்களுக்கும், அருந்ததி குலமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பெரும்கலவரம் ஏற்பட்டதாக அபேதுபே என்ற பிரெஞ்சு அறிஞர் தெரிவிக்கிறார். ஒரு திருவிழாவில் அருந்ததியர் ஒருவர், தனது தலைப்பாகையில் சிவப்புப் பூவை வைத்ததினால், அந்தச் சாதிக்கு அந்த உரிமை இல்லையென்று பறையர் குலமக்கள் ஆட்சேபிக்க, அது சாதிய போராக தாண்டவமாடி இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் சிவகாசிக்கொள்ளை என்ற ஒன்று ஒரு பரபரப்பான வன்முறையாக நடந்தியிருக்கிறது. சிவகாசியில் வாழும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக, இன்னொரு சாதி, கொள்ளை அடிப்பதற்கு நாள் நேரத்தை முன்கூட்டியே தெரிவித்து விட்டுப் படையெடுத்துச் சென்றது. இதனால் சிவகாசி மக்களுக்கு உதவியாக நெல்லை, கன்னியாககுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சாதிக்காரர்கள் சிவகாசிக்குச் சென்று அங்குள்ள சாதிக்காரர்களுக்கு துணையாக நின்றிருக்கிறார்கள். இதனால் பின்வாங்கிய படையெடுப்புச் சாதி, புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை போன்ற இடங்களில் வாழும் சிவகாசி சாதியினரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் கலவரத்தைப் பற்றிச் சொல்ல வெண்டியதில்லை.
சாதியக் கட்டுமானம்
இந்தப் பின்னணியில் பார்த்தால், இப்போதைய சாதிச்சண்டைகள், ஒரு தொடர்ச்சி போலவே தோன்றுகிறது. இந்த சாதியத் தொடர்பு அறுபட்டுப் போகமுடியாத அளவிற்குத்தான் சாதியக் கட்டுமானமும் உள்ளது. ஒருத்தன்