பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்

கேலியுமாக விமர்சிப்பது சமூகப் பழக்கம்; இந்தப் பழக்கத்தை தலித் மக்களிடமும் இவர்கள் கடைபிடிக்கிறார்கள். உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைக் கொடுமை என்பதை இந்தப் பிரிவினர் புரிந்து கொள்ளவில்லை. தலித்துக ளின் முன்னேற்றம் தலித் எதிர்ப்பலை யாக உருவாகியிருக்கிறது.

நான்காவதாக, தென்மாவட்டங்களில் தலித் என்றாலே வன்முறை என்ற ஒரு பெயர் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய வன்முறையை கண்ணால் காணாதவர்கள் கூட, இவர்களை வன்முறையாளர்கள் என்று நினைக்கிறார்கள். இது ஆபத்தானது. எந்தப் பிரிவிலும், அது கட்சியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் வன்முறையாளர்கள் இருப்பார்கள். இத்தகையோரை இவர்கள் சேர்ந்த சாதியோடு முடிச்சிடலாகாது. அதேசமயம் தலித் இளைஞர்களும் தங்களுக்கு எதிராக உள்ள சதிவலையை உணர்ந்து, வன்முறையை தவிர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

ஐந்தாவதாக, தலைவர்களை ஒரு சாதிக்குள் சிறை வைக்கலாகாது. 1940களில் ஒரு சமயம் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் குற்றாலத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது சாதியைச் சேர்ந்த ஒரு ஜமீன்தார், அங்கே முக்குலத்தோர் மாநாடு நடைபெறப்போவதாகவும், அதில் பசும்பொன் கலந்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் தேவரோ, ஒட்டல்களில் பாத்திரம் கழுவும் ஆதிதிராவிடரும், உணவு பறிமாறும் பிராமண ஏழைகளுமே என் சாதியினர். மிட்டா மிராசுவான நீங்களல்ல’ என்று முகத்துக்கு எதிராக தாட்சண்யம் பாராமல் சொன்னவர். அண்ணல் அம்ப்ேத்காரோ தன் இனத்து மக்களை மேம்படுத்துவதை லட்சியமாகக் கொண்டாலும், ஆயிரம் இழிவுகளையும் மீறி அனைவரையும் நேசித்தவர். அனைத்து இந்தியாவிற்கும் உரியவர். இந்த இரு போராளிகளையும் சாதியப்பேராட்டங்களுக்கு சாக்காக வைப்பது தவறானது.

ஆறாவதாக, வெளிநாட்டுச் சக்திகள், சாதிச் சண்டைகளை பிறநாடுகளுக்கும் விற்கும் ஒருசில தன்னார்வ அமைப்புக்கள், சாதி என்பதைத் தவிர எந்த மனிதத்தகுதியும் இல்லாத சண்டியர்கள் அவ்வப்போது சாதிக்கலவரங்கள் தூண்டிவிட்டு, மயான நெருப்பில் குளிர்காய நினைக்கிறார்கள். இந்த சதியின் ஒரு அங்கமாகத்தான் சிலைகள் உடைபடுகின்றன. இதில் உணர்ச்சி வயப்பட்டால், அந்த சதிகாரர்கள் வெற்றிப்