பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 53

பெற்றார்கள் என்று அர்த்தம். ஆகையால், அம்பேத்கார் சிலையாக இருந்தாலும் சரி அவற்றை வெறும் சிலைகளாகவே பார்க்க வேண்டு ம் , இந்த ச் சிலைகளை யும் இந் தத் தலைவர்களையும் ஐக்கியப்படுத்தலாகாது. இது சுயமரியாதை சம்பந்தப்பட்டதுதான். ஆனால், இந்தத் தலைவர்கள் இந்தச் சிலைகள் இல்லையென்பதையும், சிலைகளை உடைத்தவர்கள் எதிர்ச் சாதியினராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையும், ஒருவேளை சொந்தச் சாதிக்காரனே அந்தக் காரியத்தை செய்திருக்கலாம் என்பதையும் உணரவேண்டும்.

ஏழாவதாக சாதிகளைத்தாண்டி, தமிழ்ச் சாதிக்காக உழைத்த பெரியவர்களை இந்த இருதரப்பிற்கும் அடையாளம் காட்டவேண்டும். எடுத்துக்காட்டாக சமபந்தி போஜனம் நடத்திய வைகுண்டசாமி, இதேபோல், “சாதியும், மதமும் பொய்யெண் ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி” என்று குரல் கொடுத்தவர் வடலூர் வள்ளலார், மேல்சாதி ஊமைத்துரைக்காக, படையோடு பஞ்சாலங்குறிச்சி சென்று உடம்பில் வெண்ணையைத் தடவி வெள்ளையரின் வெடிமருந்து கிடங்கில் உயிர்த்தியாகம் ஆதிதிராவிட வீரர் கந்தரலிங்கம் ஆகியோரை அரசு குறும்படங்களாக எடுத்து மக்களிடையே காட்டவேண்டும். சாதியின் பெயரால் கையெழுத்து போடமாட்டேன் என்று சூளுரைத்தவர் அந்தக் கால மதுரை ஜில்லா போர்டு தலைவரும், தேவர் இனத்தைச் சேர்ந்தவருமான ராமச்சந்திரனார்.

வரலாற்றில் இடம்பெறாத சுந்தரலிங்கம்

எந்த நெருக்கடியும் தன்னளவில் இல்லாமல் இப்படி உயிர்ப்பலி கொடுத்த வீரன் சுந்தரலிங்கத்தின் வரலாறு தென்மாவட்ட மக்களுக்கு தெரியவேண்டிய அளவிற்கு தெரியப்படுத்தி இருப்போமானால், அந்த வீரன் பெயரில் போக்குவரத்துக் கழகம் அமைக்கப்பட்டபோது பிற்படுத்தப் பட்ட மக்களில் ஒரு பிரிவினர் அப்படி அநாகரீகமாக ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளை ஒரே சாதியாகப் பார்த்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இவரது கோட்பாடுகளை செயலாக்கியவர் கர்ம வீரர் காமராசர். இவரது அமைச்சரவையில் இருந்த கக்கன் பெருமகனார், இந்த இருதரப்பினருமே பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு சொல்லாலும், செயலாலும் நடந்தவர். இவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியவர் அப்போதைய அமைச்சரும், தேவர் இனத்தைச் சேர்ந்தவருமான ராமைய்யா அவர்கள். இந்தப் பெருமக்களின் தொண்டு குறித்தும், தமிழக அரசு குறும்படங்களை எடுத்து மக்களிடையே திரையிட்டுக் காட்ட வேண்டும். இதனால் மக்களின் சாதித்திரை நிச்சயம் கிழிபடும்.