பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்

கரும்புத்தோட்டமும் குரங்குகளும்

இந்த சாதியச் சண்டைகளை நினைக்கும்போது, கட்ந்த கால விவசாய உக்தி ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கரும்பு தோட்டத்திற்குள் நுழைய வரும் குரங்குகளை தடுப்பதற்காக விவசாயிகள் மிளகாய் கலந்த அரிசிச் சாதத்தை ஒரு பாறையில் குவியலாக வைத்து விட்டு, பத்து பதினைந்து மூங்கில் கம்புகளையும் வைப்பார்கள். மலையில் இருந்தோ, மரங்களில் இருந்தோ கரும்புத் தோட்டம் நோக்கிச் செல்லும் குரங்குகள் வழியில் இந்த மிளகாய்ச் சாதத்தை உண்டு, இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் கத்தும். பிறகு அந்த மூங்கில் கம்புகளை எடுத்துக்கொண்டு ஒன்றையொன்று அடித்துக் கொண்டு, ரத்தக் களரியோடு கரும்புத் தோட்டத்திற்கு எதிர்முனையில் ஒடும். தோட்டம் பத்திரமாக இருக்கும். இதேபோல் பல்வேறு சக்திகள், வறுமை என்னும் சாதத்தை உண்ணும் எளிய மக்களுக்கு சாதி, சமயம், மொழி என்ற கம்புகளை கொடுத்து ஒருவரையொருவர் அடிக்க வைக்கிறார்கள்.

இத்தகைய சேதிகளை, அரசாங்க மும் சமூக நல அமைப்புக்களும் மக்களிடம் எடுத்துச் சென்றால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்ற நிச்சயமாக நம்பலாம்.

நவசக்தி வார இதழ்கள் - 1999.