பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்.

மானபங்கப் படுத்தல் என்று பெயரிட வேண்டும். ஈவ்டீசிங் என்ற வார்த்தையை தூக்கி துார எறியவேண்டும். விவகாரத்தின் கடுமை, வாசர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உறைக்கும்படி செய்திகளோ, காவல்துறையோ செயல்படவில்லை. இந்தக் குற்றத்தில் மாட்டிக் கொள்வதுகூட ஒரு விபத்து போலவே நினைக்கப்படுகிறது. நேற்றைய... ரயிலில் விபத்து ஏற்பட்டால், இன்றைய ரயிலிலும் அது ஏற்பட வேண்டும் என்ற அவசியமில்லை என்று பயணிகள் நினைப்பது போல, நமது இளைஞர்களும் நினைக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, கடுமையாகத் தண்டிப்பதன் மூலமே, இத்தகைய மனப்போக்கை ஒழிக்கமுடியும் என்று சிலர் கருதுகிறார்கள். இது உண்மைதான். ஆனால் பாதி உண்மையே தவிர, முழு உண்மையல்ல. இந்தப் பாதியை மட்டுமே, வைத்துக் கொண்டு செயல்படுவது, பாதிக்கிண்று தாண்டுவதுபோலதான்.

நோயின் அறிகுறிகள் பெண்களிைக் கிண்டல் முதல் வம்பு வரை செய்கிறவர்கள் ஒரு நோயின் அறிகுறியே தவிர நோயல்ல. இவர்கள் ஏவுகணைகள். ஏவுதளங்களை நம் கண் முன்னாலேயே பார்க்கிறோம். பாதுகாப்புப்படை ரகசியம்போல் இந்தத் தளங்கள் ஒளித்து வைக்கப் படாமல், பகிரங்கமாகவே காட்சியளிக்கின்றன. இவற்றுடன் கட்டிப்புரளாமல் இந்த வம்புதும்பு காரியங்களை தடுக்க முடியாது. இந்த ஏவுதளங்கள் நமது எதிரி நாட்டு படைத்தளங்கள் அல்ல. நமது தொலைக் காட்சிகள், நாடகங்கள், பத்திரிகைகள்தான் இந்தத் தளங்கள்.

அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பெரும்பாலும் கவர்ச்சிக் கன்னிகளே தொகுப்பாளர்களாகத் தோன்றுகிறார்கள். இவர்கள் துனிநாக்கில் பேசுவது, ஒரு கவர்ச்சியையும், சிணுங்குவது படுக்கையறைக் குரல் போலவும் ஒலிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது ஒவ்வொரு பார்வையாளரையும் தனித்து வசீகரிப்பது. இதைத் தனித்துப் பார்க்கும் போது, இந்த வசீகரம் வக்கிரமாகிறது. கவ்ர்ச்சியான ஆடையுடன் முத்தம் கொடுப்பதுபோல் முகம் குவித்து, ஒரு இளம்பெண், சினிமாக் காதலைப்பற்றி வர்ணிக்கும்போது, அதை உற்றுப் பார்க்கும் இளைஞனிடம் ஒரு கிறக்கம் ஏற்படுகிறது. அந்தப்பெண், தன்னிடம் மட்டுமே அந்தரங்கமாக பேசுவதுபோல் ஒரு பிரமை ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் அறிமுகப்படுத்தும் ஒலிஒளி காட்சிகளோ, ஆபாசத்தின் உச்சம். ஒரு காலத்தில் லாவகமாகவும், நளினமாகவும் இருந்த திரைப்பட நடனங்கள் இப்போது அசிங்கமாகி விட்டன நடன இயக்குனர்கள், ஆட்டக் குழுவிற்கும், நாயகன் நாயகியருக்கும் ஒவ்வொரு உறுப்பையும், எப்படி ஆட்டவேண்டும் என்று ஆட்டுவிக்கிறார்கள்.