பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 57

அள்ளிவர ரெடியாம்.

திரைப்படங்களிலோ, கதாநாயகன் என்பவன் கதாநாயகியை நிச்சயம் இம்சை செய்யவேண்டும். அவள் சடையைப்பிடித்து இழுக்கவேண்டும். ஒடிப்போகிறவளின் முன்னால்போய் நின்று பாட்டுப்பாட வேண்டும். நண்பர்களிடம், பித்துப் பிடித்தது போல் நடந்துகொண்டு தனது காதல் வெளிப்பாடுகளை காட்டவேண்டும். உடனே அவர்கள் ராசாத்தி..... ராசாத்தி....... அட்ரஸ் என்ன கண்டுபிடி., ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி.....’ என்று பாடவேண்டும். இல்லையானால், கதாநாயகன் பதுக்கி வைக்கப்பட்ட தனது காதலியைக் கான, அவளது வீட்டிற்குப் போவான். இதைப்பார்த்த நாயகியின் தந்தை, கதாநாயகனின் கையைப்பிடித்து தடுப்பார். உடனே அந்த நாயகன் ‘இந்த கை, இவளை எனக்கு ஒருகாலத்தில் பிடித்துக்கொடுக்க வேண்டிய கை என்பதால் விட்டு வைக்கிறேன். இல்லையானால் வெட்டியிருப்பேன் என்று வீரவசனம் பேசுவான். கதாநாயகியும், அவனை புதிய புறநானூற்று வீரன்போல் பார்ப்பாள். (இப் படியொரு திரைப் படத்தை நான் பார்த்தேன்.) சி னி மாக் காதலுக்கு அ ப் பன்களே வில் லன் க ளாய் ஆக்கப்படுகிறார்கள். பெத்தவன், தன் கண் முன்னாலேயே, தன் வீட்டிலேயே, தன்னோட மகளை ஒரு இளைஞன் சல்லாபிக்கும்போது, கம்மா இருக்க வேண்டும்.

இத்தகைய சினிமாத்தனத்தை உள்ளடக்கிய படங்கள்தான் அரசாங்கத் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பாகின்றன. இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்துவிட்டு, கண்போனபோக்கில் நடந்து, மனம்போனபோக்கில் பெண்களை இம்சிக்கும் இளைஞர்களை கைது செய்ய காக்கிச்சட்டை இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படங்களையும், தயாரிப்பாளர்களையும், தொலைக்காட்சி நிர்வாகிகளையும் கைது செய்ய, எந்த சட்டம் இருக்கிறது? யார் இருக்கிறார்கள்? எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை, அது என்மீது போட்டதடி பழியை என்கிற கதைதான்.

பெண்ணியப் போராளிகளின் பாராமுகம்

இவைபோதாதென்று, நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இருபொருள் வசனங்கள். அதுவும் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை என்பது ஆபாசத்தின் ஊற்றாகிவிட்டது. இந்த ஊடகங்கள், இயற்கை மனிதர்களுக்கு செயற்கை மனிதர்களை காட்டிக் காட்டி, இப்போது இயற்கை மனிதர்களும் செயற்கையாகி விட்டார்கள். இந்தத் திரைப்படங்களில் வருகிற ஆபாச வசனங்களை, அல்லது பாடல்களை இளைஞர்கள் பாடிக்காட்டும் போது, அவர்கள் நிச்சயமாக கைதுசெய்யப்பட்டு கசையடிக்கும்

GF.S.