பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 61

காரணம் அங்கே வாழ்க்கை திரைப்படமாகிறது. இங்கேயோ திரைப்படத்தை வாழ்க்கையாக்குகிற முயற்சி நடைபெறுகிறது.

அபத்தப் பிரியர்கள்

எனக்குத் தெரிந்து, இந்தியத் திரைப்படங்களில் மட்டுந்தான், டூயட் பாடல்கள் இடம் பெறுகின்றன. வேறு எந்த நாட்டுத் திரைப்படத்திலும், இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் கிடையாது. தேவைப்பட்டால் ஒரு கிளப்பின் ஆடல் பாடல் காட்சிகளையோ அல்லது மேடை நிகழ்ச்சிகளையோ, டேப்புகளை போட்டோ உள்ளது உள்ளபடி காட்டுவார்கள்.

இந்தியத் திரைப்படங்களில் இத்தகைய நம்ப முடியாத டூயட் பாடல்கள், ஒருவனை வீரனாக்குவதற்காக முப்பது பேரை பேடியாக்குவது, மகன் இன்ஸ்பெக்டர், தந்தை கொள்ளைக்காரன், மகள் குற்றவாளி, தந்தை நீதிபதி, அம்மாவுக்குத் தெரிந்த மகன், மகனுக்கு தெரியாத அம்மா, எல்லாம் முடிந்த பிறகு இறுதியாக வரும் போலீஸ், நீதிமன்ற களேபரங்கள் போன்ற அபத்தமான காட்சிகளை மக்களும், அபுத்தமாகவே ரசிக்கிறார்கள்: பெரும்பாலோருக்கு இது செயற்கைத்தனம் என்றும், ஒரு திரைப்படத்திற்கு தேவையான மசாலா என்றும் தெரியும். இப்படி தெரிந்து கொண்டுதான் ரசிக்கிறார்கள். அபத்தங்களை ரசிப்பதில் நம்மவர்களுக்கு ஒரு அலாதிப் பிரியம்.

ரத்தம் தேவைப்படாத கண்ணிர்

என்றாலும், விளையாட்டு, வினையாகும் என்பதுபோல், சினிமாத் துறையினர் எடுக்கும் சில அபத்தமான காட்சிகளும், கருத்துக்களும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கின்றன. இவர்கள், விஞ்ஞான விரோதமான கருத்துக்களை நம்ப வைத்து பல சமூக விபரீதங்களை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஏற்படுத்தும்

படங்களும் சக்கை போடு போடுகின்றன. எடுத்துக்காட்டாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவை நாடறியச் செய்த ரத்தக் கண்ணிர்ணி சினிமாவை மேற்கோள் காட்டலாம். இந்தப் படம், அந்தக்

காலத்தில் கொடி கட்டிப் பறந்ததோடு, பரபரப்பாக பேசப்பட்டது. இதில் நடித்த எம்.ஆர். ராதாவுக்கு, காந்தா என்ற தாசியோடு பாலியல் உறவு கொண்டதால் தான், அவருக்கு தொழுநோய் (குஷ்டரோகம்) வந்ததாக கதைக்கரு அமைந்திருந்தது. இந்தத் நோய் பெண்களால் வரக்கூடியது என்ற ஒரு தவறான கருத்து அனைத்து மட்டத்திலும் இந்தப் திரைப்படத்தால் ஏற்பட்டது. இன்று கூட, இதன் தாக்கம் உள்ளது. ஆனால் இந்த தொழுநோய் பெண்களோடான பாலியல் உறவால் வருவதல்ல. மைக்கோ பாக்டீரியம் லெப்ரேணி என்ற கிருமிகளால்