பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...

வரக்கூடியது. ஆகையால் இந்த நோய் உண்மையான பிரம்மச்சாரிகளுக்கும் வரலாம். இந்த விஞ்ஞான உண்மைக்கு புறம்பாக ரத்தக் கண்ணிர் திரைப்படம் தவறான தகவலை கொடுத்ததோடு பெண்களையும், கொடுரமாக நோக்குவதற்கு தளம் அமைத்துக் கொடுத்தது. இது குறித்து கவிஞர் தணிகைச்செல்வன் தினமணியில் விபரமாகவே எழுதியிருக்கிறார்.

சிறு பிள்ளைத்தனமான கற்பனை

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படம். அதில் இளம் பெண்ணான ரேவதி க்கு ஏதோ ஒரு மனச்சிக்கலுக்காக ஹிப்னாட்டிஸம் எனப்படும் வசீக சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் ஒருவரை அவரது கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சிகிச்சையின்படி, ரேவதி, ஐந்தாறு வயது குழந்தை பருவத்திற்கு போய்விடுவார். அந்தச் சமயம் பார்த்து, அவரை அந்த குழந்தைப் பருவத்திற்குள் அழைத்துச் சென்ற டாக்டருக்கு மாரடைப்பால் மரணம் ஏற்படும். இதற்குப் பிறகு இளம்பெண்ணான ரேவதி ஒரு குழந்தை போலவே பேசுவார்; நடப்பார். இவரை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு கதை. இப்படிப்பட்ட ஒரு மட்டமான கற்பனை எப்படி தோன்றியதோ?

மனநோய் சிகிச்சைகளுக்கு, பல வழிகள் உள்ளன. இவற்றில் மிகவும் எளியது “ஹிப்னாட்டிஸம்” என்று சொல்லக்கூடிய வசிய முறை. மனநோயாளியை, ஒரு மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்து சுருள் சுருளான வட்டக் கோடுகளின் மையத்தில் உள்ள ஒரு புள்ளியை மட்டும் பார்க்க வைத்து, சம்பந்தப்பட்ட மனோதத்துவ நிபுணர் இன்னும் பத்து சொல்வதற்குள் உங்கள் மனம் நான் சொன்னபடி கேட்கும் என்று சொல்வார். உடனே அந்த நோயாளியின் மனமும் நிபுணரின் வசப்படும். இந்த

சிகிச்சைக்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம். அவர் நிபுணர் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமற்றவராக இருந்தால், “ஹிப்னாட்டிஸம்” எடுபடாது. என்றாலும்,

ஒத்துழைப்பு கொடுக்கும் மனநோயாளியை, அரை மயக்க நிலையில் வைத்து, அவரது அடிமனதை வெளிப்படுத்தி, குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் போன்றவற்றை நிபுணரால் வெளிக்கொண்டு வர முடியும். அந்த நோயாளின் அடிமனதில் மண்டிக் கிடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான உணர்வுகளை நோயாளியாலேயே பேச வைக்க முடியும். இதனால் அடிமனச்சுமை இறங்கும். பிறகு, இன்னும் பத்து சொல்வதற்குள் நீங்கள் பழைய படி ஆகிவிடுவீர்கள் என்று நிபுணர் சொல்லி விட்டு, ஒன்று, இரண்டு என்று எண்ணும்போது சம்பந்தப்பட்ட மனநோயாளியும் இப்போதைய வயதுக்கு திரும்பி விடுவார்.