பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்.

தலையில் இன்னொரு அடிபட்டு அவருக்கு பைத்தியம் தெளிந்துவிடுமாம். இப்படி பைத்தியக்காரத்தனமான படங்களை பார்க்க வேண்டியது நமது தலைவிதியாகி விட்டது. இன்னும்

ஒரு பொதுப்படையான காட்சி. கதாநாயகன், கடத்தப்பட்ட காதல் பெண்ணை தேடிப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவனிடமோ வாகனம் ஏதும் இருக்காது. உடனே ஒரு

சைக்கிள் காரனை அடித்துப் போட்டுவிட்டோ அல்லது கார்க்காரனை பள்ளத்தில் உருட்டி விட்டோ அந்த வாகனத்தை ஒட்டிக்கொண்டு. ஒடுவான். இதற்கு ரசிகர்களின் கைதட்டும் பலமாக இருக்கும். இப்படிச் செய்வது ஒரு கிரிமினல் குற்றம். இதை உண்மையாகவே செய்கிறவனுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால் அப்படி நடிப்பவருக்கோ லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும். இப்படிப்பட்ட நாயகனை போல் அவன் ரசிகன் நடந்து கொண்டால் இந்த சமூகம் என்னாவது?

கொச்சைப் படுத்தப்படும் கிராமங்கள்

என் வீட்டிலும் தொலைக்காட்சி இருப்பதால், என் விருப்பத்திற்கு விரோதமாக சில திரைப்படங்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நான் பார்த்த ஒரு படத்தில், கதாநாயகனான கார்த்தி, காதலர்களை ஒன்று சேர்த்து வைத்த குற்றத்திற்காக, ஊர்ப்பஞ்சாயத்து அவருக்கு பூமி பூஜை என்ற தண்டனை வழங்குகிறது. இதன்படி, சாத்திர சம்பிரதாயங்களோடு, மாலை மரியாதைகளோடு அவர் ஒரு குழிக்குள் இறக்கப்படுகிறார், மண்ணை மூட வேண்டியதுதான் பாக்கி. இப்படி எந்த ஊரில் பூமி பூஜை என்கிற உயிரோடு சமாதி வைத்தல் நடைபெறுகிறது? நடைபெறாத ஒரு கொடுரத்தை நடைபெறச் செய்ய நினைப்பதும் சட்டப்படியான குற்றமே.

இன்னொரு படத்தில், கதாநாயகி தன் கையால் கன்னத்தில் அறை வாங்கும் ஊர்வாசிகள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு பத்து ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கிறாள். உடனே ஊரே அவளிடம் அடி வாங்கி, தலைக்கு பத்து ரூபாய் வாங்க திரள்கிறதாம். இன்னொரு படம். இந்தப்படம் அதன் அப்போதைய புதிய இயக்குநரை நாடறியச் செய்து, என் உயிரினும் இனிய தமிழ் மக்களே என்று பேச வைத்திருக்கும் வெற்றித் திரைப்படம். இந்தப் படத்தில் வறண்டு போன ஊருக்கு, மழையை வருவிப்பதற்காக, கன்னி கழியாத இளம் பெண் ஒருத்தி அந்த ஊரைச்சுற்றி நிர்வாணமாக போகிறாளாம். எந்த ஊரிலும் நடைபெறாத சம்பவம் இது. ஆனாலும், இந்தக் காட்சியை அந்த இயக்குநர் அரசு விருதுகள் சாட்சியாக நியாயப்படுத்துகிறார். இப்படி கிராமங்கள் கொச்சைப் படுத்தப்படுகின்றன.