பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 65

கொடுரமான கொடுமை

கொடுரமான கிரிமினல் செயல்பாடுகளையும், நமது திரைப்பட நண்பர்கள் வியாபாரமாக்க தயங்குவதில்லை. உதாரணமாக, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரங்கா, பில்லா என்ற இரண்டு கொடூரமான ரவுடிகள் புதுதில்லியில் புத்தர் பூங்காவில், ஒரு ராணுவ அதிகாரியின் மகளை கற்பழித்து கொடுரமாக கொன்றார்கள். ஆனால், இவர்களின் பேரில் இங்கே திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடின. இவற்றின் கதைக்கருக்கள் மாறுபட்டது என்றாலும், அப்போது பரவலாக பேசப்பட்ட கொடிய கயவர்களின் பெயர்களை திரைப்படங்களுக்கு வைத்தது ஒரு இழிவான வியாபாரத்தனமாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரிதான். அபத்தங்களை பட்டியலிட்டால் பெரும்பாலான திரைப்படங்கள் தேறாது. திரைப்படங்களில் பேன்டஸினி (எ.ஆசபஆஈவ) எனப்படும் நம்பமுடியாத அதீதங்கள் தேவைப்படலாம். ஆனால் இவையே விஞ்ஞானத்திற்கு புறம்பாகவும், சமூகத்தில் நிலவாத சம்பவங்களை காட்சிப் படுத்துவதாகவும் இருக்கலாகாது. ஆனால் நமது திரைப்படக்காரர்களோ செயற்கையான திரைப்படங்களை எடுப்பதன் மூலம் இப்போது மக்களையும் செயற்கையாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு வேண்டுகோள்

திரைப்படத் துறையினருக்கு, இந்த சமூகத்தின் சார்பில் ஒரு பணிவான வேண்டுகோளை விடுக்க வேண்டியதாகிறது. இவர்கள், வெறும் கனவு வியாபாரிகளாக இல்லாமல், சமூகப் பொறுப்புள்ள கலைஞர்களாகவும் பரிணாமப்பட வேண்டும். மத்திய அரசு சார்பில் திரைப்படத் தணிக்கைக்குழு ஒன்று இருப்பதாக அறிகிறேன். இந்தக் குழு காட்சிகளை தணிக்கை செய்கிறதே தவிர, விஞ்ஞான அல்லது சமூக விரோதமான கதைக்கருக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்த குழுவில் பெரும்பாலும் திரைப்பட வியாபாரிகளும், சமூகப் போலிகளுமே இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் மருத்துவர், பேராசிரியர், பொறியாளர், சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் போன்றவர்களையும் சேர்க்க வேண்டும். இதனால் திரைப்பட அபத்தங்கள் குறையாது போனாலும், விஞ்ஞானத்திற்கும், சமூக பொறுப்புக்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறாது என்று நம்பலாம்.

நவசக்தி வார இதழ்கள் - 1999.