பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 67

போட்டு'க் கொடுத்தார்கள். அவர்களுக்கு, நான் ஒரு தீண்டத்தகாதவனாகவே தென்பட்டேன். என் நிறமும், பேச்சும், பதவியும் அவர்களின் காலங்காலமான பதவிப் பட்டாவிற்கு வில்லங்கமாக தோன்றியது. நான் வாழ்ந்த கரோல் பாக்கிலும் இதே நிலைமைதான். அப்போதுதான், வடமொழித் தமிழர்கள் பெரும்பான்மையாய் இருக்கும் இடத்தில்தான், அவர்களது கய ரூபத்தை அடையாளம் காணமுடியும் என்று தந்தைப் பெரியார் தெரிவித்த கருத்தின் முழுத் தாக்கமும் எனக்குப் புரிந்தது.

இந்தச் சமயத்தில்தான் சாலய்யார் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அதுவும் வேறுபட்ட சூழலில் அறிமுகமானார். அங்குள்ள ஒரு சாதியினர், ஒரு சாதி அமைப்பை உருவாக்கி, சாலய்யாரை அதில் சேரச்சொன்னார்கள். அவர், அவர்களை “திட்டி"யதோடு, திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆனால் நான், இந்த முயற்சியை, புதுதில்லிக்கு வந்திருக்கும் காலா மதராசிகளில் ஒரு பிரிவினரின் எழுச்சி என்று அனுமானித்து, பட்டும் படாமலும் கலந்து கொண்டேன். சொந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை, கைத்தடிகளாக பல இலக்கியவாதிகள்கூட பயன்படுத்திக்கொள்ளும் போது, பேராசிரியர் அதற்கு மறுத்தது, நாளடைவில் என்னை ஒரு சாதிய மறுப்பாளனாக பரிணமிக்க வைத்தது.

இரண்டு வகை உறவாடல்

எவருக்கும் இரண்டு வகையான உறவாடல் உண்டு. ஒன்று சொந்த உறவாடல். இன்னொன்று சமூகச் சிந்தனை வெளிப்பாடுகளில் ஏற்படும் சமூக உறவாடல். இத்தகைய இரண்டு உறவாடல்களும், ஒன்றுக்கொன்று, சம்பந்தமில்லாமல் இருக்கலாம். இப்படித்தான் எல்லோரையும்போல் எனக்கும் இந்த இரண்டு வகை உறவாடல் உள்ளன. ஆனால், சாலய்யாரிடமும், அவரது துணைவியாருடனும், நான் கொண்ட உறவு, இந்த இரண்டு வகைகளையும் கொண்டது. என்னை சொந்த சகோதரனாகவே இருவரும் கருதினார்கள். அதே சமயம், தமிழ்ச் சமூகத்தின் புதிய முளைகளில் ஒன்றாகவும் அனுமானித்தார்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்திலும், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும், என்னைப் பங்கெடுக்க வைத்தார். இந்த மகத்தான குடும்பத்திடம், நான் ஒரு மாணவனைப்போல சமூக நிகழ்வுகளுக்கான காரணங்களை கண்டுபிடித்திருக்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசு ஊழியர்களும் தத்தம் அரசாங்கக் குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதற்காக, அதே குடியிருப்பில், ஒற்றை அறையில் தங்களைத் தாங்களே சிறைவைக்கும் சூழலில், சாலப்யார் விசாலமான வீட்டில்