பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 69

ஏற்றுக்கொண்டது. இவரது பங்களிப்பு இல்லாமல், அந்தக் காலத்தில் தமிழ்ச்சங்க. நிகழ்ச்சிகள் எதுவுமே நடந்ததில்லை. சாலய்யாரின் தாக்கத்தால், இத்தகைய மேட்டுக்குடி தமிழர்களும், தங்களைத் தாங்களே, மறுபரிசீலனை செய்து மண்வாசனைக்கு உரியவர்களாய் மாறினார்கள் என்பதையும் பதிவு செய்தாக வேண்டும்.

தமிழ்ச்சங்கத் தலைமை நானும், தில்லித் தமிழ்ச்சங்கத்தில், சாலய்யார் தலைமையில், கவியரங்கம், பேச்சரங்கம் போன்றவற்றில் பங்கெடுத்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி இன்னும் நன்றாகவே நினைவுக்கு வருகிறது. அந்தச் சங்கத்தின் மலரை (சுடர்), உருவாக்கும் பொறுப்பு சாலய்யாரிடம் வழக்கம்போல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பேராசிரியரும், தமிழ்ச்சங்க துணைத்தலைவரும், தமிழறிஞருமான விஸ்வநாதன், அவர்களின் உதவியோடு, இந்த மலர்களை செம்மையாகத் தயாரிப்பதுண்டு. இவற்றில் ஒன்றில், “நான் ஒரு மூடன்” என்று நான் எழுதிய கவிதை பிரசுரமானது. சராசாரியான ஒருவருக்கு, வானொலிப் பெட்டியின் உள் நுணுக்கங்களோ, அல்லது ஒலிபரப்பின் விஞ்ஞான முறைமைகளோ தெரியாதுபோனாலும், அந்த வானொலிப்பெட்டியில் எதைஎதை எப்படித் திருகினால், இசையோ அல்லது சொற்பொழிவோ கேட்கும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். இதுபோல் எனக்கு முருகனுக்கு வேல் இருப்பதாகவோ, மயில் இருப்பதாகவோ, முருகன் என்ற ஒன்று இருப்பதாகவோ தெரியாது. ஆனாலும், முருகக் கோயிலுக்கு நான் போனால் எனக்கு நினைத்தது நடக்கிறது, வேண்டுமானால் என்னை மூடன் என்று சொல்லுங்கள், கவலையில்லை என்ற பொருளில் அந்தக் கவிதையை எழுதி இருந்தேன். இதைப் பற்றிக் கருத்துச் சொல்லும்படி, சாலய்யாரை வம்புக்கும் இழுத்தேன். உடனே அவர், “நீங்கள் மூடனாகவே இருப்பதாகத் தீர்மானித்தால், நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். என் முகம் சுருங்கியதைப் பார்த்த, மிகச்சிறந்த மனிதநேயரான அவர், “உங்கள் கவிதை எனக்கு ஏற்புடையது இல்லையென்றாலும், அது நல்ல கவிதை” என்பதுமாதிரி பாராட்டினார்.

வால்டேர் வழியில்.

சாலய்யாரிடம், எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. இது எப்போதுமே மோதல்கள் ஆனதில்லை. அந்தக்காலத்தில், அவரது வீட்டில், உணவருந்திக்கொண்டே அவரது கருத்துகள் சிலவற்றை மறுப்பேன். சாலினி அவர்கள், தனது துணைவரோடு சேர்ந்து எனது கருத்துகளுக்கு எதிராக வாதாடுவார். பலசமயம், சாலய்யாளின் அணுகுமுறைக்கு என்னை உட்படுத்திக் கொள்வேன்.