பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 போராளித் துறவி சாலய்யார்.

சில சமயம், முற்றிலும் மாறுபடுவேன். இந்த இரண்டு சமயங்களிலும், சாலப்யார் மகிழ்ச்சியும் அடையமாட்டார், வருத்தமும் கொள்ள மாட்டார். பிறருக்கு உள்ள மறுப்புரிமையை வால்டேரைப்போல, முழுமையாக அங்கீகரித்தவர். ஆரம்பகாலத்தில் அவருடன், நான் மேற்கொண்ட கருத்துப் பகிர்வு, என்னை ஒரு சமூகப் போராளி எழுத்தாளனாக உருவாக்குவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். நான் ஆரம்ப காலத்தில் எழுதிய, வளர்ப்பு மகள் என்ற நாவல், நடுவண் அரசின் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாவது வகுப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டதற்கு, சாலப்யாரே காரணம்.

பலாப்பழம் போல்வார்.

சாலய்யார் அவர்கள், ஒரு பலாப்பழம் மாதிரி. அவரது அடலேறான தோற்றமும், பேச்சும் ஆரம்பத்தில், முன்பின் அறியாதவர்களுக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்கும். ஒரே ஒரு நிமிடம் தான். அதற்குள் அந்தப் பலாப்பழமே தானே உடைந்து, தனது சுளைகளைக் காட்டும். ஒருபக்கம் போராளியாக இருந்த அவர், மறுபக்கம் எல்லாப் போராளிகளையும்போல ஒரு சேயாகவும், தோன்றினார். இத்தகையப் பலாப்பழத்தை கண்டறிந்து, உண்டறிய முடியாத - தமிழகத்தில் வாழும், சாதிகெட்ட தமிழனை, செம்மைப் படுத்த பல்வேறு திட்டங்களோடு சென்னைக்கு வந்தார். இதற்காகவே வசதியாக வாங்கிய சம்பளத்தையும் உதறிவிட்டு ஓடிவந்தார். ஆனால், இந்தத் தமிழன் அவரை கண்டுகொள்ள வேண்டிய அளவிற்கு கண்டுகொள்ளவில்லை. இது அவரது தோல்வி அல்ல. சினிமாத் தனங்களிலும், காலடிக் கலாச்சாரத்திலும் சிக்கிக் கிடக்கும் தமிழனின் தலைவிதி இது. இவன், சாலய்யார் போன்றோரின் தலைமைக்கு தகுதி இல்லாதவனாகவே இருந்து வருகிறான்.

வித்தும்-விளைச்சலும்.

எனது நிழல் முகங்கள் என்ற நாவலில் ஒரு காட்சி. இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கோ என்ற கருப்புத் தமிழ் இளைஞன், தமிழகத்தின் அவல நிலைக்கு தமிழ்ப் பழைமை மீட்பு வாதத்தில் மனம் செலுத்தும் தமிழாசிரியர்களும் ஒரு காரணம் என்று ஒரு ரயில் பயணத்தில் விமர்சித்தபோது, அதற்குப் பதிலாக பேராசிரியர் சோமய்யா என்ற பாத்திரம் இப்படிப் பேசும்:

“முற்போக்குத் தமிழனுக்கும், கெட்டதுகளில் நல்லது இருப்பதைக் கண்டுபிடிக்க இப்போதைக்கு முடியவில்லை என்பதற்கு நீயும் ஒரு