பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 போராளித் துறவி சாலய்யார்.

வாய்ப்புக்களை, தொலைவாய்ப். புறந்தள்ளிவிட்டு, ஒரு போராளித் துறவியாகச் செயல்பட்டவர்.

என்றாலும், சாலய்யார் அவர்கள் மரணத்திற்குப் பிறகு, மறுபிறவியாப் விகவரூபம் எடுத்திருக்கிறார். இவரது மரணம் நம்முள் மரணமுற்ற சுயமரியாதை, தன்னல மறுப்பு, தமிழ் நேயம் போன்ற நெறிகளை மரித்தெழச் செய்திருக்கிறது. இப்போதாவது, பல்வேறு அமைப்புகள் சாலப்யாரின் மரணம், தமிழ் நெறிகளின் மரணமாகும் சூழலைப் புரிந்து கொண்டது பாராட்டத்தக்கது. அவரை மையமாக வைத்து நிகழ்ச்சிகளை நடத்தாத அமைப்புகள்கூட இப்போது, அவரைப்பற்றி நிகழ்ச்சிகளை அமைப்பதும், நிகழ்ச்சிகளை இதழ்களில் எழுதுவதும், காலம் தாழ்த்திய செயற்பாடு என்றாலும், பாராட்டிற்குரியது. சாலய்யாரின் நினைவைப் போற்றுவதென்பது, அவரது நெறிகளைப் போற்றுவதே அவரைப்போல், புகழை விரும்பாதத் துறவியாக, எந்த விவகாரத்திலும் உள்ளதை உள்ளபடிச் சொல்லும் சிந்தனையாளராக, எந்தப் போராட்டத்திலும் முதலில் நிற்கும் போராளியாக நாம் நிற்பதே அவருக்குச் செய்யும் சேவையாகும்.

சாலய்யார் விட்டுச் சென்ற பணிகளை, அவருக்கு இணையாக செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர் சாலினியார் அவர்கள். இவர்கள் இருவரும், வீட்டிலும் மேடையிலும் ஒரேமாதிரியான பார்வை கொண்டவர்கள். ஒரு இம்மி அளவுகூட கருத்து வேறுபாடு கொள்ளாதவர்கள். ஒரு சுயமரியாதைப் போராளி, எப்படி மனைவியை நடத்த வேண்டும் என்பதற்கு சாலப்யாரும், இதே நெறிகளைக் கொண்ட ஒரு மனைவி, எப்படிக் கணவனிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கேற்ப சாலினியாரும் இருந்தனர். இந்த இருவருக்கும் இணையாக எவரும் இருப்பார்கள என்பது சந்தேகமே. இப்படி இவர்கள் இணையான இணை. இந்த இணையில் ஒருவர் நம்மோடு வாழ்கிறார். அந்தச் சாலினியாரின் தலைமையில் நம்மிடையே நிலவும் ஒருசில கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தமிழனுக்கு உரிய பொதுவிவகாரங்களுக்கு போராடுவது சாலப்யாருக்கு ஒரு நிரந்தரமான நினைவாகும். அதேசமயத்தில், தக்காரும் மிக்காரும் இல்லாமல் மானுட சேவைக்கென்றே வாழ்ந்த சாலய்யாருக்கு அரசோ அல்லது நாமோ ஒரு நினைவு மண்டபத்தை அமைக்க வேண்டும் அமைத்தாக வேண்டும்.

சாலப் இளந்திரையனார் நினைவுமலர் - 1999.