பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அரவாணிகள்

வழக்கு போடுகிறார்கள். நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்பு இவர்களை படாதபாடு படுத்துகிறார்கள்.

அலிகளும் குடும்பமும்

பாலியல் குணங்க ள் பக்கு வம் பெறும் பத்து ப் பன்னிரெண்டாவது வயதில் சிறுவனாகத் தோன்றுகின்றவன் தன்னுள் ஒரு சிறுமியைக் காண்கிறான். பூப்படைந்த பெண்போல் நானுகிறான். அவர்களைப் போலவே ரகசியமாக புடவை கட்டுகிறான். இந்தச் சமயத்தில் தன்னைப் பற்றிய புதிர் புரியாமல் அல்லாடுகிறான். இதுவே மனோ நோயாகிறது. ஒவ்வொரு அலி யும், விஞ்ஞானப் பூர்வமான மருத்துவ விளக்கம் இல்லாத பின்னணியில், ஆரம்பத்தில் மனோ நோயில் சிக்கிக் கொள்கிறான். குடும்பத்தினரும் இவர்கள் சேலை கட்டுவதை பார்க்கும்போது, அடித்து உதைக்கிறார்கள், ‘உடம்பில் சூடு போடுகிறார்கள். அப்படியும் அந்த அலியை திருத்த முடியாததால் வீட்டை விட்டு விரட்டியடிக்கிறார்கள். இல்லையானால், அடி உதை தாங்கமுடியாமல் அந்த அலி சிறுசுகள் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். எப்படியாவது ஒரு வழியில் தங்களைப் போன்ற அலிகளைக் கண்டறிந்து, அந்த சமூகத்தில் இரண்டறக் கலந்து விடுகிறார்கள். ஆனாலும், குடும்பப் பாசம் இறுதிவரை இவர்களை ஆட்கொள்கிறது. பெரும்பாலோர், பல வழிகளில் சம்பாதித்து அடித்து விரட்டிய தங்கள் குடும் பத்திற்கே பணம் அனுப்புகிறார்கள். ஒருசில பணக்கார வீடுகளில் இப்படிப்பட்ட அலிகள் நாசூக்காக வைக்கப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்து, ஒரு சில அரசு ஊழியர்களும் பேராசிரியர்களும் ஆணுடையில் வேடம் போட்டு விளங்குகிறார்கள்.

கூவமாகிப் போன கூவாகம்

விழுப்புரத்திற்கு அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் விழா நடைபெறும் மூன்று நாட்கள் மட்டும் அனைவரும் பெண்ணுடையில் வருகிறார்கள். கூத்தாண்டவர்க்கு மாலையிட்டு, இறுதியில் மாங்கல்யம் அறுபடும்போது தங்களது நிலைமையை நினைத்துக் கத்துகிறார்கள், கதறுகிறார்கள். சராசரி மனிதராய் இருக்க முடியாமல் போய் தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துவதற்காக ஒப்பாரி போடுகிறார்கள். இந்த அடிமன வேதனை புரியாமல், நமது பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இவர்களை கேலிக்கும் கேளிக்கைக்கும் உரியவர்களாக சித்தரித்துத் தொலைக்கிறார்கள்.

இந்தப் பாவப்பட்ட பிறவிகளும், தங்களை மானுடத்தின் மூன்றாவது பரிமாணமாக நினைக்காமல், புராண சங்கதிகளில்