பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 77

அடைக்கலமாகிறார்கள். பாரதப்போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக சாமுத்திரிகா லட்சணங்கள் அத்தனையையும் கொண்ட அரவானை, பாண்டவர்கள் பலியிடவேண்டிய நிலைமை. ஆனாலும் தனக்குத் திருமணம் செய்துவைத்தால்தான் அப்படி பலியாகத் தயாராய் இருப்பதாக, அரவான் கூறுகிறான். சராசரிப் பெண் எவளும் பலியாகப்போகும் அவனை மணக்க முன்வரவில்லை. ஆகையால், கிருஷ்ணனே பெண்ணாகி அரவானை மணக்கிறார். அரவானும், மணம் முடித்த மூன்று நாளில் களத்தில் பலியாக்கப் படுகிறான். இந்த அலித் தோழர்கள் தங்களை ஆணாகிப் பெண்ணாகி அரவானின் மனைவியாகிய கிருஷ்ண விதவைகளாக நினைக்கிறார்கள். இதற்காக, கூத்தாண்டவர் போன்ற பல்வேறு அரவான் கோயில்களில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியில் மணம் முடித்து மாங்கல்யம் இழக்கிறார்கள்.

அலிகள் உருவாக்கம்

ஒரு அலிக்குழந்தை எப்படி உருவாகிறது என்பது பற்றி இன்னும் முழுமையான ஆராய்ச்சி செய்யப்படவில்லை. குளோனிங் முறையில் சாதனை படைப்பதாய் தம்பட்டம் அடிக்கும் விஞ்ஞானிகளுக்கு மானுடத்தின் அலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ, இந்த அலித்தன்மையை போக்குவதற்கான வழி வகை க ைள கண்டறிய வோ மன மில் ைலயோ மார்க்கமில்லையோ அவர்களுக்குத்தான் வெளிச்சம். மேலே குறிப்பிட்டுள்ள குரோமோசோம்களில் ஏற்ப்படும் கோளாறே அலிகள் உருவாவதற்கு காரணம் என்று இதுவரை பொத்தாம் பொதுவாக கூறப்படுகிறது.

என்றாலும், இது இயற்கையின் சமச்சீர் நிலை என்று தத்துவார்த்தமாகக் கூறப்படுகிறது. பொதுவாக மிருகங்களும் பறவைகளும் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குட்பட்டே பாலியல் உறவில் ஈடுபடும். தாவரங்களில் கூட எல்லாமலர்களும் ஒரே சமயத்தில் மலருவதில்லை. எல்லாப் பூச்சிகளும், வண்டுகளும் ஒரேசமயத்தில் தேன் எடுத்து தங்குத்டையில்லாத மகரந்தச் சேர்க்கையைச் செய்விப்பதில்லை. ஒரு பூவில் முட்டையிடும் பூச்சி, அந்த முட்டையின் பாதுகாப்பிற்காக இன்னொரு பூவையும் இழுத்து மூடி, மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துகிறது. அந்த முட்டை, பூச்சியாய் ஆவதும், பூ பழமாய் ஆவதும் பின்னர் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. இத்தகைய பிரமிக்கத்தக்க சமச்சீர் நிலைக்கு, மனிதன் போக்கு காட்டுகிறான். இவனுக்கு அல்லது இவளுக்கு உடலுறவு என்பது 24 மணி நேர ஈடுபாடு. குழந்தை