பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 79

கொடுக்க வேண்டும். காரணம் இவர்களும் பாலியலில் ஊனமுற்றவர்களே.

இதற்கிடையே விஞ்ஞானிகளும், அலிக்குழந்தைப் பிறப்பைத் தடுக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். இப்போது உயிரணுவில் உள்ள 23 குரோமோசங்களை பிளந்து பார்க்கிற முயற்சி வெற்றி பின் முதல் கட்டத்தில் உள்ளது. இந்த குரோமோசங்களில் நாலு கோடியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான இயல்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அலித்தன்மைக்கு உரிய இயல்புகளைக் கண்டறிந்து இத்தகைய பிறப்பைத் தவிர்க்க ஆய்வு செய்யலாம்.

அலித்தோழர்களும் தங்கள் பங்கிற்கு அரவான் கதை, முர்க்கே மாதா கதை போன்ற புராணங்களின் வம்சா வழிகள் என்று எந்த்க் காலத்திலோ சொன்னதை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது அசல் மூடநம்பிக்கை. கூவாகம் போன்ற கோயில்களில் தாலி கட்டியும், பிறகு அதை அறுத்தும் ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தவேண்டும். அதேசமயம் கூவாகம் போன்ற இடங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை ஆரோக்கியமான முறையில் கூடுவதில் தவறில்லை.

இப்போது அலிகளைப் பரிகாசமாகப் பார்ப்பதுபோய், அனுதாபமாக பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. இதுவே பாசமாக வேண்டும். மேலும் கீழும் இல்லாத ஒரு தோழமை உணர்வாக மாறவேண்டும். நான் வாடாமல்லி என்ற தொடர்கதையை ஆனந்தவிகடனில் எழுதி, பின்னர் வானதி பதிப்பகத்தால் வெளியிட்ட பிறகு நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலமாக அலிகளை கிண்டலும் கேலியுமாக விமர்சித்த திரைப்பட-தொலைக்காட்சியினர் இப்போது திடீர் ஞானோதயம் பெற்று அலித்தோழர்களை அனுதாபத்தோடு சித்தரிக்க துவங்கியிருக்கிறார்கள். இவை என்னுடைய நகல் போன்றவைதான். இதற்காக மூலம் கோபப்படவில்லை. காப்பி அடித்தாலும் ஆரோக்கியமாக அடிக்கிறார்களே என்கிற மகிழ்ச்சிதான்.

நவசக்தி வார இதழ் - 1999.