பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2 வீட்டைக் கட்டிப் பார்!

‘மாப்பிள்ளே... நிலத்தைக் கவனிக்காமல் மோசம் போயிட்டியளே. மோசம்...”

“யாரு மாமா. எது மோசம்...?”

‘நிலத்துக்கு அடுத்தபடியாய் இருக்கிற வீட்டைப் பாருங்க... அதுல காம்பவுண்ட் சுவர் கண்ணுல படலியா? நம்ம இடத்துக்குள்ளே நாலு அடி எடுத்திருக்கு”

‘அய்யய்யோ.. அதனாலே!”

“வீட்டுக்காரரைப் பார்த்துக் கேட்கணும். அவர் சாக்குப் போக்குச் சொன்னால்... வேற வழியில்ல. காம்பவுண்ட் சுவரை

டிக்கனும்...”

என் மாமனார் பழைய காலத்து ஆள். வைரம் பாய்ந்த உடல் கட்டுள்ளவர். வம்புச் கவருக்கும் போக மாட்டார். வந்த சுவரை விடவும் மாட்டார். நான் யோசித்துச் சொன்னேன்.

‘நாலடிதானே. வீடு கட்டுறபடி கட்டுவோம். அப்புறம் பேசுறபடி பேசுவோம்.

மாமனாரும் பதிலளித்தார். ஊர்ல எனக்கு நிறைய வேலை இருக்குது.

அத்துமீறிய வீட்டுக்காரரைப் பார்க்கப் போனேன். அங்கே நீக்ரோ மாணவர்கள்தான் கிடைத்தார்கள். ‘வீட்டுக்காரர் எங்கே? என்று அவர்களே என்னிடம் கேட்டார்கள். இதற்குள், என் மாமனார் டேப்பை வைத்து நிலத்தை மேஸ்த்திரியின் உதவியோடு அளந்து கொண்டிருந்தார். நான் மனத்துக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன். ‘கடவுளே. கடவுளே. நீ இருப்பதை நான் நம்புறேன். ஆனால், ஒரு நிபந்தனை. அந்தக் காம்பவுண்ட் சுவர் என் நிலத்துக்குள்ளே இருக்கப்படாது. மாயம் செய்தோ, மந்திரம் செய்தோ மாற்று. மாற்றி வை.”

நல்ல வேளையாக, காம்பவுண்ட் சுவர், நிலத்தின் எல்லையிலேயே இருந்தது. என் நிலத்தில் அடுத்தவர் ஆக்கிரமிப்பு இல்லை. எப்படியோ, தொழிலாளர்கள், நிலத்தில் இறங்கினார்கள். நானும் ஒப்புக்கு ஒரு மணி நேரம் இருந்துவிட்டு, ‘மாமா... நீங்க எனக்குப் பெண் கொடுத்தது மாதிரி எப்படிப் பெரிய காரியமோ அதே மாதிரி இதுவும் மாமா.” என்று சொல்லி விட்டு, வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அப்புறம் பெங்களுருக்குப் போய்விட்டேன்.

லாக்கப்பில் தொழிலாளர்கள்

சென்னையில் உருவாகும் என் வீட்டைப் பற்றிய சுவையான