பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வீட்டைக் கட்டிப் பார்!

மேலே மூன்றடி வந்தபோது, கையில் காசு இல்லை. என்ன செய்யலாம் ‘ என்று யோசித்தபோது, என் சட்டகர் லிங்கசாமி, தொழிலாளர்களுக்குக் கூலி சப்ளைக்கும் பொறுப்பேற்றார். எனது நண்பரான நூலக வெளியீட்டாளர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்கள், ‘பிடிங்க ரூபாயை... அப்புறம் அட்ஜெஸ்ட் செய்துக்கலாம் என்று பணம் கொடுத்து உதவினார்.

கிரில் ஆசாமி

வீடு கட்டும் பணி தொடர்ந்தது. ஜன்னல்களுக்கு, கிரில் வைக்கும் கட்டம் வந்தது. அடையாறில் உள்ள ஒருத்தர், கிலோ இரும்பு பதினோறு ரூபாய்க்குக் கிடைக்கும்போது பத்து ரூபாய் விகிதத்தில் செய்து தருவதாக வாக்களித்தார். மாமனார், ஐந்நூறு ரூபாயை அட்வான்ஸ் தொகை கொடுக்கப் போனபோது, நான் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வைத்தேன். ஒரு மாதம் ஆகியது. அட்வான்ஸ் வாங்குவதில் அட்வான்ஸாக இருந்த அந்த ஆசாமியைக் காணவில்லை. கடையில் பொறுப்பான பதில் கிடைக்கவில்லை. விசாரித்துப் பார்த்ததில், “அவர் அப்படித்தான்!” என்று கேள்விப் பட்டோம்.

ஒவ்வொரு பைசாவின் அருமையையும் தெரிந்து வைத்திருந்த என் மாமனார் கோபங் கொண்டார். வீடு கட்டும் தொழிலாளர்கள் உதவியுடன், எப்படியோ அந்த ஆசாமியை என் வீட்டுக்குப் பலவந்தமாகக் கொண்டுவந்துவிட்டார். மாமனாரின் மிரட்டலுக்கும், தொழிலாளர்களின் பார்வைக்கும் பயந்துபோன அந்த மனிதர், கடிகாரத்தைக் கழட்டிக் கொடுக்கப்போனார். ஒரு மனிதனைச் சிறுமைப் படுத்தலாகாது என்று சிறுமையான அனுபவங்கள் மூலம் பட்டறிந்த நான், அந்த மனிதரை நெருங்கினேன். உடனே நான் அவரை அடிக்கப்போவதாக நினைத்து, அவர் என்னை பயந்து பார்த்தபோது, ஒங்களை நம்புறேன். நீங்கள் கடிகாரத்தைத் தர வேண்டாம். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொடுத்த பணத்தையோ அல்லது அதற்கான கிரில்களையோ கொடுங்கள். நீங்கள் போகலாம்.” என்று கிரில் மனிதரைப் போக விட்டேன். அவரைக் கடத்தி வந்த தொழிலாளர்கள், சூள் கொட்டினார்கள். ‘கடைசியில் நமக்குத்தான் கெட்டபேரு.” என்றார்கள். என் மாமனார், என் கையில் இருந்து, தன் கையை உதறியபடியே சொன்னார்.

‘நான் ஊருக்குப் போகணும். நிறைய அங்க வேலை க்குது. டேய், யாராவ க்கெட்...”

இருக்குது து டி.

மரமும் - மாமனாரும்.

எப்படியோ மாமனார் முறுக்கைச் சமாளித்தேன். மீண்டும் வீட்டு வேலை துவங்கி, கதவு ஜன்னல்களுக்கு மரம் வாங்கும்