பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 85

கட்டத்திற்கு வந்தோம். கர்நாடக மாநிலத்தில், காட்டிலாகா அதிகாரிகளிடம் எனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இருபதாயிரம் ரூபாய்க்கு, ஹென்னே மரம் வாங்கப் போவதாகவும், இதன் மார்க்கெட் மதிப்பு முப்பதாயிரம் ரூபாய் என்றும் மாமனாரிடம் சொன்னேன். உடனே அவர், “என்ன மாப்பிள்ளே. (அதாவது என்னய்யா நீ மாப்பிள்ளே. எட்டாயிரம் ரூபாய்ல அடங்குற மரத்துக்கு இருபதாயிரம். அப்புறம் லாரிச் செலவு.” என்றார். உடனே நான், ‘சும்மா கிடங்க ைமாமா.. எட்டாயிரம் ரூபாய்ல எதுவும் வாங்க முடியாது... வாங்கப் போறது சிக்மக்லுர்ல. கொடுக்கப் போறது இருபதாயிரம் ரூபாய்.” என்றேன். மாமனார் பதிலளித்தார்.

‘நான் ஊருக்குப் போகணும். நிறைய வேலை இருக்கு.”

மரத்தை விடலாம். மாமனாரை விட முடியுமா...? விட்டுக் கொடுத்தேன். மாமனார் கணக்குப்படியே, எட்டாயிரம் ரூபாய்தான் ஆனது. நல்ல வேளையாக என்னைச் சுமார் பதினையாயிரம் ரூபாயில் இருந்து காப்பாற்றினார்.

மாமனார் போட்ட கணக்கு

என் மாமனார் போட்ட கணக்கு தப்பியதே இல்லை. எங்களோடு எங்களாக, ஒரு வாலிபன் கட்டிட வேலை பார்த்து வந்தான். ஒரு ஏழைக் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஏழைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்ற என் கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டான அந்தப் பையன் மீது எனக்கு அபார பிரியம். மாமனாருக்கும் அப்படியே. அவருக்கு நாங்கள் கொடுத்தனுப்பும் சாப்பாட்டின் பாதியை அவனுக்கே கொடுத்துவிடுவார். அவனும், என் மாமனாருடனேயே இரவில் கட்டிடத்திற்குள் தங்குவான்.

ஒருநாள்...

மாமனார் என்னிடம் சொன்னார்.

‘மாப்பிள்ளை. இந்தப் பையனும் அந்தக் குடும்பமும் இங்கே தங்குறாங்க கட்டிடத்துல. நிறைய சாமான் இருக்குது. இவங்க முழிக்கிற முழி சரியில்ல. அதனால். இங்கே தங்கப்படாதுன்னு சொல்லப்போறேன்.’

‘சரியான ஆளு மாமா நீங்க! நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்காங்க. இப்போ மெட்ராஸ்ல ஒரே வெள்ளக் காடு இந்தச் சமயத்துல விரட்டினால் எப்படி:

நான் பெங்களுர் வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து, என் மனைவியின் கடிதம் வந்தது. என் மாமனார் குறிப்பிட்ட அந்தப்