86
வீட்டைக் கட்டிப் பார்!
பயலும், அந்தக் குடும்பமும் கொட்டும் மழையிலும், நடு ராத்திரியில், கட்டிடத்திற்குள் கிடந்த ஆயிரம் ரூபாய் இரும்புக் கம்பிகளையும், கார்ப்பென்டரின் கருவிகளையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்களாம். என் மாமனார், நான் அவர் பேச்சை கேட்கவில்லை என்று காரணம் காட்டி, நிஜமாகவே ஊருக்குப் போய்விட்டாராம். கடிதம் போதாது என்று என் மனைவி டெலிபோனில் கத்தினார். பெங்களூரில் தற்செயலாக கண்ணில்பட்ட அந்தப் பயலிடம், நான் விபரம் கேட்க, அவன், ‘நான் அப்படி செய்வேனா?’ என்று அழுது புலம்ப, அதை நம்பி அவனுக்கே பத்து ரூபாய் அன்பளிப்பு கொடுத்த விபவரத்தை மனைவியிடம் சொல்லவில்லை.
டில்லிக்குக் காவடி
இதற்கிடையே, அரசாங்கக் கடனில் இறுதித் தவணைப் பணமான இருபத்தெட்டாயிரம் ரூபாய் வரவில்லை. மூன்று மாதமாக எழுதி எழுதிப் பார்த்தும் பலனில்லை. வேறு வழியில்லாமல், உடனடியாகப் பணம் வரவில்லையானால், அட்மினிஸ்டிரேட்டிவ் டிரிப்யூனலுக்குப் போகப்போவதாக மிரட்டி எழுதினேன். இரண்டு மாதமாகியும், இதற்கும்கூட எதுவும் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், புதுடில்லிக்குப் போனேன். போகும்போது சாங்ஷன் ஆர்டர் வந்துவிட்டது. பலனில்லாமல், அதாவது மூன்றாவது தவணை என்பதற்குப் பதிலாக, இரண்டாவது தவணை என்று தவறுதலாய்ப் போட்டுவிட்டார்கள். இவ்வளவுக்கும் என் நண்பர் ராவ் என்பவர்தான் நிர்வாக அதிகாரி; தென்னிந்தியர். இந்த தவறை குறிப்பிட்டு மேலதிகாரிக்கு குறிப்பு எழுதி அவரது அனுமதியோடு புது சாங்ஷன் ஆர்டர் வருமென்றும், அந்த அதிகாரி வெளிநாடு போயிருப்பதால் காரியம் பழுக்க ஒருமாதம் ஆகும் என்றும் எனக்கு சலுகை காட்டுவதுபோல் பேசினார்.
நான் ஓடினேன்; ஓடினேன். ஏ.ஜி.சி.ஆர். ஆபீஸ்வரை ஓடினேன். அங்கே சாங்ஷனுக்கு ஏற்பப் பணம் வழங்கும் ‘இர்லா’ அலுவலகம் போனேன். சம்பந்தப்பட்ட கிளார்க்குக்கு சல்யூட் அடித்ததும், பைலைப் புரட்டினார். ஒரு காகிதத்தைப் பார்த்து ‘கியர் ஹாலே... அட்மினிஸ்டிரேட்டிவ் டிரிப்யூனல்’ என்றபடி, அவர் லேசாய்ப் படிக்கப் போனார். அப்போதுதான், அந்த ஆசாமி அப்படி ஒரு கடிதம் நான் எழுதியிருப்பதை பார்க்கப்போனார். நான் அந்த கடிதத்திலேயே கையைப் பரப்பி மறைத்துகொண்டு “டெல்லி ஆத்மி, அச்சா ஆத்மி” என்றேன். அதாவது, டெல்லிக்காரர்கள் நல்ல மனிதர்கள் என்றேன்.
அந்த அஸிஸ்டெண்டைப் பார்த்து, சாங்ஷன் ஆர்டரில் இரண்டாவது தவணை என்று தப்பாகப் போடப்பட்டதை