பக்கம்:சரணம் சரணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சரணம் சரணம்

இறுதியில் அழிப்பான். அவனுடைய வீரத்தில் கருனே யாகிய ஈரமும் உண்டு.

ஆணின் தன்மை ஆண்மை. ஆண்மை என்ற சொல் லுக்கு வீரம் என்று பொருள். ஆடவன் ஆண்மை உடைய வகை இருந்தால் அவனே அழகுடைய பெண்டிர் விரும் புவர். வீரனிடம் காதல் கொள்வது மங்கையர் இயல்பு. வீரமும் காதலும் இணைந்து இன்ப வாழ்வை உண்டாக் கும். வீரத்தை உடையவன் ஆடவன். காதலைச் செய்பவள் பெண். மாதர் காதல்’ என்பது தொல்காப்பியச் சூத்திரம். மாதர் என்பதற்கே காதல் என்று பொருள். பெண்மை என்பதற்கு விருப்பம், காதல் என்ற பொருள் கள் உண்டு. நல்ல வீரமுள்ள ஆடவர்களே அழகிய மகளிர் விரும்பிக் காதல் செய்து மணப்பார்கள். இந்த இரண்டை பம் எண்ணிய நக்கீரர் திருமுருகாற்றுப்படையில், மங்கையர் கணவ, மைந்தர் ஏறே’’ என்று முருக&னப் புகழ்கிறார், - . -

வெவ்வேறு மூர்த்திகள் வீரச்செயல்களேச் செய்திருந் தாலும் அவர்களுடைய வீரத்தைப் புலப்படுத்தும் தலங் கள் தனியாக இல்லே. சிவபெருமானுக்குத்தான் அட்ட வீரட்டம் இருக்கின்றன. அவன் எல்லோரிலும் பெரிய விரன். பல நாட்கள் போர் செய்யாமல் சில கணங்களில் பகைவர்களை அழிக்கும் பேராற்றல் உடையவன். அத்த கைய வீரனைத் தன்னுடைய காதலுக்கு ஆட்படுத்தியவள் எம்பெருமாட்டி என்று சொல்ல வருகிறார்,

பெருவீர&னத் தனக்குரிய காதலளுக ஏற்றுக்கொண்ட பிராட்டி, அதற்கு அடையாளமாக அவனுடைய உடம் பெல்லாம் முத்திரையிட்டாளாம். அரும்பொருள் ஏதே னும் ஒருவருக்குக் கிடைத்தால் அதில் தம்முடைய முத்திரையிடுவது உலக இயல்பு. களத்தில் அறுவடை செய்த நெல்லேப் பொலியாகக் குவிக்கும்போது அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/100&oldid=680472" இலிருந்து மீள்விக்கப்பட்டது