பக்கம்:சரணம் சரணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாறையில் அடித்த முளே 95

விரிவிலா அறிவி னேர்கள்

வேருேரு சமயம் செய்தே

எரிவினுற் சொன்ன ரேனும்

எம்பிராற் கேற்றதாகும்:

என்பது அவர் வாக்கு. வேறு சமயம் செய்வதற்கு இரண்டு காரணங்களே அவர் கூறுகிறார், இப்போதுள்ள சமய தத்துவங்களே ஆராய்ந்து அறியும் விரிவான அறிவு இல் லாதவர்கள், *நான் கூறும் அருமையான கருத்தை எந்தச் சமயமும் சொல்லவில்லே?” என்று கூறிப் புதுச் சமயத்தைத் தொடங்குவார்கள். பிறருக்கு உள்ள பெரு மையை அறிந்து பொருமை கொண்டு, இவன் என்ன சமய ஆசிரியன்? நானே ஒரு சமயத்தைத் தொடங்கு கிறேன்?’ என்று புதுச்சமயத்தைத் தொடங்குவார்கள்” இப்படி அவர்கள் செய்யும் புது முயற்சி வேறு துறைகளில் அமையாமல் சமயத்தில் அமைந்ததே என்று இறைவன் அதையும் ஏற்றுக் கொள்வானம். சமய சமரச உணர்வை இந்தப் பாடல் நன்கு தெரிவிக்கின்றது.

உண்மையில் இனிமேல் புதிய சமயம் தோன்ற வேண்டிய அவசியமே இல்லே, இப்போதுள்ள சமயங் களே அளவுக்கு மிஞ்சி வந்து விட்டன. வெவ்வேறு மூர்த்திகளேத் தலைமையாகக் கொண்டு வழிபடும் நெறி கள் பலவாக இருந்தாலும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆறு. அவற்றையே ஷண்மதம் என்பர். அறுவகைச் சமயம் என்பதும் அவையே. அந்த ஆறு மதங்களும் வைதிக சமயங்கள்; வேதத்தைப் பிரமான மாக ஏற்றுக் கொண்டவை. சூரியனே முழு முதற் கடவு ளாகக் கொண்ட செளரம், கணபதியைத் தனித்தலேமைக் கடவுளாகக் கொண்ட காணபத்தியம், முருகனே முன் நிறுத்துவதாகிய கெளமாரம், சக்தியைப் பரதேவதை யாக வழிபடும் சாக்தம், விஷ்ணுவைத் தலைவகைக் கொண்டு வழிபடும் வைஷ்ணவம்; சிவபெருமானப் பரம் பொருளாக வைத்து வழிபடும் சைவம் என்பன அவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/105&oldid=680477" இலிருந்து மீள்விக்கப்பட்டது