பக்கம்:சரணம் சரணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ... .” சரணம் சரனம்

இந்த ஆறு சமயத்தையும் ஆதிசங்கரர் வரையறைப் படுத்தி அமைத்தார். இவை வழிபடும் வகையில் வெவ் வேறு மூர்த்திகளுக்குத் தலைமையைத் தந்தாலும் தமக்குப்

பிரமாணமாக வேதத்தையே மேற்கோள் காட்டும் இயல்பை உடையன. ஆதலின் இவை வைதிக சமயங்கள். இவற்றை, ஊழ் கொண்ட சமயம்’ (முறையாக

அமைந்த சமயங்கள்) என்று கம்பன் பாடுவான்.

அம்பிகையை முழுமுதற் கடவுளாக வழிபடுவார்கள் சாக்தர்கள். ரீவித்யா உபாசகர்கள் என்பவர்களும் அவர் களே. மேலே சொன்ன ஆறு சமயத்துக்கும் அவளே தலேவி யென்றும், அவ்வச்சமயத்தில் தலைமை கொள்ளும் மூர்த்தி யாக இருப்பவள் அவளே என்றும் அவர்கள் கூறுவார்கள். ஒவ்வொரு சமயத்துக் கடவுளுக்கும் அன்னேக்கும் தொடர்பு உண்டு.

சூரியனைத் தலைவனுகக் கொள்வது செளரம். கதிரவன் நடுவில் இருந்து அவனுக்கு ஒளித்ரும் பெருமாட்டி அன்னேயே என்பர் சாக்தர். பானுமண்டல மத்யஸ்தா’ என்பது லலிதா சக சிரநாமம். காணபத்தியத்தின் தலே வகிைய கணபதியும் கெளமாரக் கடவுளாகிய குமாரனும் அம்பிகையின் புதல்வர்கள். வைஷ்ணவர்களின் தனித் தெய்வமாகிய திருமால் அம்பிகையின் சகோதரன்; அம்பி கையின் அம்சமே திருமால் என்பது சாக்தர் கருத்து; “கோவிந்த ரூபிணி முதலாகிய அம்மையின் திருநாமங்கள் இந்தக் கருத்துக்குச் சான்றாகும். சைவத்தின் பரம்பொரு 1ளாகிய சிவபிரானுடைய அருளே வடிவமானவள் சக்தி. சிவபிரானுக்கு மனைவியாகவும் தாயாகவும் மகளாகவும் வெவ்வேறு நிலயில் விளங்குகிறவள் என்று சைவ நூல் கள் கூறுகின்றன. சாக்தத்தைப்பற்றிச் சொல்ல வேண் டிய தில்லை. -

ஆகவே ஆறு சமயத்தோடும் தொடர்புடையவள் அம்பிகை. அந்தச் சமய சம்பந்தமான நூல்களேயும் புரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/106&oldid=680478" இலிருந்து மீள்விக்கப்பட்டது