பக்கம்:சரணம் சரணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாறையில் அடித்த முளே 97

ன்னங்களேயும் படித்தால் அம்பிகையின் தொடர்பு புலகு கும். சாக்தர்களோ, அவ்வாறு பல்வேறு தொடர்புடைய வளாக இருப்பதோடு ஆறு சமயங்களுக்கும் தனித் தல்ேவி பாக இருப்பவள் அம்பிகையே என்றும், அவளுக்கு ஆறு சமயங்களும் உடம் பாடு என்றும் கூறுவர். “நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி’ என்பது திருப்புகழ்.

இவ்வாறு இருக்கும்போது, புதியதாக ஒரு சமயத்தை அமைத்து, அதுதான் உய்யும் வழியைக் காட்டுவது என்று கொண்டாடுகிறவர்களைப் பற்றி அபிராமி பட்டர் சொல்ல வருகிறர். அம்பிகை சிவபெரும்ான் திருமேனியை அணைத் துக் குறியிட்ட செய்தியைச் சொன்னவர், அவள் சிவனைத் தனக்குரியவகைக் கொண்டவள் மட்டுமல்ல எல்லாச் _சமயத்தையுமே தனக்கு உரியன்வாகக் கொண்டவள்” என்பதை நினைக்கிறார், எந்தச் சமயத்தை மேற்கொண்டு அன்பு செய்தாலும் அன்னேயின் திருவருள் கிடைக்கும் இந்த ஆறு சமயங்களும் இருக்க, வேறு புதிய சமயம் ன்தற்கு? எல்லா விதமான சமயக்கொள்கைகளும் இந்த ஆறுவகைச் சமயக் கொள்கைகளில் அடங்கிவிடுமே: இது தெரியாமல் பொழுதையும் அறிவையும் ஆற்றலையும் விணுக்கிப் பிறரையும் விளுக்கச் செய்து புதிது புதிதாகச் சிலர் நிறுவுகிறார்களே!-இத்தகைய இரக்கம் அபிராமி :பட்டருக்கு உண்டாகிறது. -

அத்தகைய வினர்களைத் திருத்தலாமா? அவர்கள் .திருந்த மாட்டார்கள். நாம்சொல்வதுதான் யாவற்றிலும் உயர்ந்தது’ என்ற அகந்தையும், தாம் கண்டதே காட்சி என்ற விடாப்பிடியும் உள்ளவர்களாகிய அவர்களே எந்த வகையிலும் திருத்த இயலாது. மற்றவர்களுக்குச் சமய தத்துவங்களே விளக்கும்போது சில ஏதுக்களைக் காட்டி விளக்குவார்கள்; எடுத்துக்காட்டிக் கூறுவார்கள். அவற்றல் அவர்களுக்குத் தெளிவு உண்டாகும். புகை இருப்பதகுல் நெருப்பு இருக்கும், சமையலறையைப் போலே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/107&oldid=680479" இலிருந்து மீள்விக்கப்பட்டது