பக்கம்:சரணம் சரணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாறையில் அடித்த முளை 9

பைத்தியக்காரன் செயலாகவே முடியும் என்று அபிராமிே பட்டர் கூறுகிரு.ர்.

யார் ஆசைப்படுகிறர்களோ, யார் அருட்பசி உடைய வர்களோ, நாம் வீணுகப்போய் விடுவோமே! ஏதாவது செய்ய வேண்டாமோ?? என்று யார் அஞ்சி வருகிறார் களோ அவர்களுக்குத்தான் நல்லவர்கள் அறிவுரை கூறு. வார்கள். மற்றவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள். குரங்குகளுக்கு அறிவுரை கூறிய தூக்களுங்குருவி பட்ட பாட்டைப் பஞ்ச தந்திரம் சொல்கிறது.

தம்மிடம் வரும் மாணவர்களின் தகுதியை அறிந்து: அதற்கு ஏற்றபடி உறுதி பகர்வதே நல்லாசிரியர்களுடைய இயல்பு. தம்மிடம் உள்ள அற்புத உண்மைகளே விணே வாரி இறைக்கமாட்டார்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனே? -

அபிராமிபட்டர் கூறுவதைப் பார்க்கலாம்.

தேறும் படிசில ஏதுவும்

காட்டிமுன் செல்கதிக்குக் கூறும் பொருள், குன்றிற் கொட்டும்

தறி;குறிக் கும்சமயம் ஆறும் தலைவி இவளாய்

இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம்,உண்டு என்றுகொண்

டாடிய வீணருக்கே.

(பெரியோர்கள் இவை வைதிக சமயங்கள் என்று. குறிப்பிடும் சமயங்கள் ஆறுக்கும் அதிதேவதை அபிராமி யாகிய இவளாக இருப்பதை அறிந்திருந்தாலும், வேறு சமயமும் உண்டு என்று அதனைப் பாராட்டிய வீணக் களுக்கு, அவர்கள் உண்மையைத் த்ெரிந்துகொள்ளும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/109&oldid=680481" இலிருந்து மீள்விக்கப்பட்டது