பக்கம்:சரணம் சரணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணம் சரணம்

அபிராமியம்மையின் திருவடிகள் நமக்கு அரணுக உள்ளன என்று பாடிய அபிராமிபட்டருக்குத் தொடர்ந்து ஒரு நினைவு வருகிறது. அப்பெருமாட்டியின் திருவடி களேயே புகலாகப் புகுகின்ற அடியார்களேயும் உள்ளிட்டே, ‘சரணம் அரண் நமக்கே’’ என்று பாடினர். அம்பிகை யினிடம் சரணுகப் புகுகின்றவர்கள் இந்த உலகத்தில் உள்ள அடியர்ாகள் மட்டுமா? தேவர்களெல்லாம் அவ் வாறு அடைக்கலம் புகுந்து உய்பவர்களே. தேவர்கள் புகுவது பெரிய காரியமா? தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனகிய மகாதேவனே அவளுடைய அடியார் கூட்டத் தில் சேர்ந்தவன்தான். திருமாலும் அத்தகையவனே. இந்த நினைப்பு வருகிறது பட்டருக்கு.

மகாதேவனுடைய பெருமையை நினைத்துப் பார்க் கிறார். திரிபுரசங்காரம் செய்த பராக்கிரமம் அவருடைய எண்ணத்தில் மிதக்கிறது. பொன், வெள்ளி, இரும்பு என் னும் மூன்று மதில்களேத் தனித்தனி உடையவை திரிபுரங் கள். அவற்றுக்குத் தலைவர்களாக இருந்தவர்கள் வித்யுன் மாலி, தாரகாட்சன், வாணன் என்னும் மூன்று அசுரர்கள். மூன்று புரங்களும் வானில் பறந்துகொண்டே இருக்கும். திடீரென்று பூமியில் இறங்கும். அவற்றின்கீழ் அகப்பட்டுப் பல மக்கள் நசுங்கி மடிவார்கள். தமக்கு எந்த விதமான லாபமும் இல்லாவிட்டாலும் பிறர் துன்புறுவதைக் கண்டு இன்புறுவது அசுரர் இயல்பு. அந்த மதில்களே தங்களு டைய பெருஞ் சொத்தாக எண்ணி இறுமாந்து வாழ்ந் கார்கள் அசுரர்கள். இத்தனை பேரை அழிக்கிருேமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/11&oldid=680482" இலிருந்து மீள்விக்கப்பட்டது