பக்கம்:சரணம் சரணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:100 சரணம் சரணம்

சில ஏதுக்களைக் காட்டி, இனிச் சொல்லுகிற நற்கதிக்கு உபாயம் இது என்று அறிவுறுத்தும் உறுதிப்பொருள், குன்றின்மேல் அடிக்கும் மரத்தாலான ஆப்புக்களைப் போன்றவை; அவை வீணுகிப் போகுமேயன்றி உள்ளே சிறிதும் இறங்காதது போல இந்த அறிவுரைகள் ப்யனின்றி ஒழியுமேயன்றி அவர்களுடைய அறிவிலே சிறிதும் புகா,

ஏது-பிரமாணங்கள், மேற்கோள்கள் முதலியன. காட்டி எடுத்துக்காட்டி. முன்செல் கதி-இனிமேல் செல் லும் நல்ல கதி. கொட்டுதல் - அடித்து இறக்குதல். தறி. நடு தறி, ஆப்பு. சமயம் ஆறும் - ஆறு சமயங்களிலும். கல்வி இவளாய்ச் சமயம் ஆறும் இருப்பதை என்றும் கூட்டிப் பொருள் சொல்லலாம். வேறும் சமயம்: வேறு சமயமும் என்று உம்மையை மாறிக் கூட்டுக. கொண் டாடுதல்-சிறப்பாகப் பாராட்டுதல். வினருக்குக் கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறி என்று கூட்டுக.) . நெகிழ்ச்சியுள்ள மண்ணில் இறங்கும் முளே வன்மை புள்ள பாறையில் இறங்காதது போல, பக்குவமுள்ளவர் *ளுக்குத் தெளிவை உண்டாக்கும் அறிவுரை வீணர்களி -ம் பயன்படாது என்று உவமையை விரித்துக்கொள்க. முளேயும் கொட்டுபவனுடைய முயற்சியும் வீணுதலைப் போலக் கூறும் பொருளும் கூறுபவன் முயற்சியும் விணுகும்.

இந்த உவமையை நாலடியாரிலிருந்து எடுத்திருக் அபிராமிபட்டர். நன்று அறியா மாந்தர்க்கு அற சிதறியை உரைத்தால் அது குன்றின்மேல் கொட்டும் அறிபோல் ஆகும் என்று நாலடியார் சொல்கிறது. “பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க்கு - அறத்தாறு உரைக்குங்கால்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/110&oldid=680483" இலிருந்து மீள்விக்கப்பட்டது