பக்கம்:சரணம் சரணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அன்னை

இறைவனே வடிவத்தில் நிறுவி வழிபடும் சகுண உபாசன இந்த நாட்டில் சிறப்பாக இருக்கிறது. கோயில் களும் அந்தக் கோயில்களில் வெவ்வேறு வகையான மூர்த்திகளும் இருக்கின்றன. அவரவர்கள் மன இயல்புக்கு ஏற்றபடி எந்த மூர்த்தியினிடமேனும் முறுகிய அன்பு கொண்டு இறைவனே அடைய வேண்டும்.

இவ்வாறு அமைந்த மூர்த்திகளின் வழிபாட்டு முறை வெவ்வேருக இருக்கும். அதைக் கொண்டு அந்த மூர்த்தி களே ஸாத்விக ராஜஸ தாமஸ் மூர்த்திகள் என்று பிரித்துச் சொல்வதுண்டு. மக்கள் இந்த மூன்று குணங்களின் வசப் பட்டவர்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குணம் மிகுதியாக இருக்கும். அந்த அந்தக் குணம் உடையவர்கள் தம் தம் மன இயல்புக்கு ஏற்ற மூர்த்திகளே வழிபட்டுக் கொண்டாடுவார்கள்.

எல்லோருமே ஞானத்தை விரும்பி வழிபடுவதில்&ல. பெரும்பாலும் காம்ய உபாசனே செய்கிறவர்களே உலு கத்தில் மிகுதி. அவர்கள் தம்முடைய வாழ்க்கையின் நிலக்கு ஏற்றபடி வழிபாடுகளே நடத்துவார்கள். உடம்பு, உரை, உள்ளம் இந்த மூன்றிலும் தூய்மை உடையவர் களும் தூய்மையை அடைய விரும்புகிறவர்களும் சில மூர்த்திகளே வழிபடுவார்கள். இத்தகைய வழிபாட்டில் சத்துவ குணமே மேல் ஓங்கி நிற்கும். உணவு முதலிய வற்றில் வரையறை இல்லாதவர்கள் தாம் உண்ணும் புலால் நிவேதனமாக ஏற்கும் தாமஸ் தேவதைகளே வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/112&oldid=680485" இலிருந்து மீள்விக்கப்பட்டது