பக்கம்:சரணம் சரணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சரணம் சரணம்

இருப்பது இறைவன் திருவருள் என்பதை அறிவார்கள். அதைப் பெறுவதற்குச் சத்துவ சாதனங்களைச் செய்வார் கள்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று படிப்படி யாக அமைந்த சாதனங்களே ஒன்றன்பின் ஒன்றாக மேற். கொள்வார்கள். அவர்கள் சிவபெருமான், கணபதி, முருகன், அம்பிகை, நாராயணன், கிருஷ்ணன், இராமன் முதலிய மூர்த்திகளே வழிபடுவார்கள்.

அம்பிகையை வழிபடுவதில் வாமாசாரம் என்பது ஒரு வகை. அது தாமத குணவழிபாடு. மந்திர யந்திர தந்தி ரங்கள் அந்த முறையிலும் உண்டு; எனினும் காம்ய உபாஸ்னே அது. ஞானத்தில் ஆசையுடையவர்கள் அதை. விரும்பமாட்டார்கள். தட்சினசாரம் அல்லது ரீவித்தியா உபாஸ்னே சத்துவகுண வழிபாடு. இந்த நாட்டில் அந்த முறைமையே பெரியோர்கள் மேற்கொண்டு நன்மை பெற்றார்கள். அத்வைத சித்தாந்தத்தையே தம்முடைய லட்சியமாகக் கொண்டவர்கள் அவர்கள். உபாலனு பலத். தால் அன்னேயின் திருவருளேயும் அதனுல் பேரானந்தப் பெருவாழ்வையும் அடையாலம் என்ற உறுதி பூண்டவர் கள் அவர்கள். -

வாம மார்க்கத்தில் அம்பிகையை வழிபடுகிறவர்கள் வங்காளத்தில் மிகுதி. தமிழ்நாட்டில் ஸ்ரீவித்தியா ,பாஸ், கர்களே அதிகம். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளே அறியாமலே சக்தியை வழிபடும் சாக்தர்கள் யாவரும் ஒரே வகையான வழிபாடுடையவர்கள் என்று நினைப்பது தவறு. வாமாசாரத்தில் பஞ்ச மகாரங்கள் என்று ஒரு சம்பிர தாயம் உண்டு. மது மாம்ஸ் மத்ஸ்ய மைதுன முத்ரை என் பார்கள். இந்த நாட்டிலும் சிலர் தமக்கு அளவற்ற சக்தி’ கிடைக்க வேண்டுமென்று கருதி வாமாசாரத்தை மேற். கொண்டு உபாஸன செய்பவர்கள் இருக்கிரு.ர்கள். அது வெறும் காம்யஉபாஸ்னே. அதல்ை உபாஸ்கருக்கும் நல்ல பயன் விளையாது; மற்றவர்களுக்கும் கிடைக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/114&oldid=680487" இலிருந்து மீள்விக்கப்பட்டது