பக்கம்:சரணம் சரணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சரணம் சசனம்

லும். இதுதான் உண்மையான உபாஸ்கனுடைய நிலை. எந்த மூர்த்தியைக் கண்டாலும் அவனுக்குத் தான் வழி கடும் மூர்த்தியாகவே தோன்றும்; அந்த மூர்த்தியின் நாமமே வாயில் வரும்,

அம்பிகையை நோக்கி அபிராமிபட்டர் சொல்கிறார், ‘என் தாயே, எல்லாரிலும் கருணே மிகுந்தவள் தாய். தாயி ளிைடம் ஒட்டிக்கொண்டு பாலருந்தும் குழந்தை அப்பா அழைத்தாலும் உடனே போகாது. நான் உன்னுடைய திருவடிக்கே அன்பு பூன்டு ஒட்டிக் கொண்டேன். அப்படி யிருக்கத் தாமஸ் குணமுள்ள மூர்த்திகளைப் போய் வழி படுவேன? அவர்களிடம் அன்பு வைப்பேன?’ என்கிறார்; அப்படிச் செய்யமாட்டேன்’ என்று உறுதியாகச் சொல் கிறார்,

நம்முடைய வாழ்வு அருமையாகக் கிடைத்தது. இதைப் பயனுள்ள வழியில் போக்க வேண்டும். மனம், மொழி, மெய் என்ற மூன்று கரணங்களாலும் செயல் செய்து வாழும் இந்த வாழ்வில் அந்த மூன்றையும் உயர்ந்த பயனை அடையவே பயன் படுத்த வேண்டும். அது தான் அறிவுக்கழகு. அம்பிகையைத் தியானித்து அவளு டைய புகழைப் பேசி அவளை வணங்கி மூன்று கரணங்களே யும் ஈடுபடுத்தியவர்களுக்கு வேறு துறையில் மனம் செல் லாது. அமிர்தத்தை நுகர்ந்தவன் புளியங்காடியை நுகர முயல்வாளு?

‘வாழ்க்கை வீனகும்படி, உயிர்ப் பலியைக்கொள்ளும் சிறு தெய்வங்களிடம் நான் சிறிதளவும் அன்பு வைக்க மாட்டேன். என்னுடைய மிகுதியான அன்பு உன்பால் இருக்கிறது. அப்படி இருக்க வேறு திசையில் நான் செல்வது எதற்கு?’ என்கிறார் இந்த பக்தர்.

வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று.

மிக்க அன்பு பூனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/116&oldid=680489" இலிருந்து மீள்விக்கப்பட்டது