பக்கம்:சரணம் சரணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் வல்லபம் 113

தங்கள் கருத்தை மன்மதனிடம் சொல்லவே, அவன்

முதலில் அஞ்சி மறுத்தான். தேவர்கள் பலபடியாகச்

சொல்லி வற்புறுத்தவே. அவன் அவ்வாறு செய்வதாக ஏற்றுக் கொண்டான்.

அவன் சிவபிரான்மேல் மலரம்புகளை விட்டான். அந்தப் பெருமான் தம் நெற்றிக்கண்ணேத் திறந்து பார்த். தார். காமன் எரிந்து பொடியான்ை. பிறகு அவனுடைய மனேவி வந்து வேண்டப் பார்வதியின் திருமணத்தில் அருள் புரிவதாகக் கூறினர். பார்வதி திருமணம் நிகழ்ந்தது. பரமசிவனர் மன்மதனே எழுப்பி ரதியின் கண்களுக்கு. மட்டும் அவன் தெரிவான் என்றும், மற்றவர்களுக்குத் தெரியாத அரூபியாக இருப்பானென்றும் அருளினர். அது. முதல் காமனுக்கு அநங்கன் என்ற பெயர் உண்டாயிற்று.

பார்வதி திருமணத்திற்குப் பிறகு முருகன் திருவவ தாரம் செய்தான். பரமயோகியாகிய சிவபெருமான் மணம் செய்து கொண்டு குமார நாயகனைத் தோன்றச் செய்தார். இது கந்த புராணத்தில் வரும் வரலாறு.

இந்த வரலாற்றை வைத்துக்கொண்டு சமத்காரமாக அம்பிகையின் வல்மையை உயர்வாக எடுத்துச் சொல் கிறார் அபிராமிபட்டர்.

சிவபெருமான் தவக்கோலம் உடையவர்.

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே’’

என்று புறநானூறு அவரை அருந்தவத்தோன் என்று. சொல்லும். பற்றி லார்க்கே வீடருள் பரம யோகி’ என்பது திருவிளையாடற் புராணம். உலகத்தில் யோகியாக இருப்பவர்கள் புலனே அடக்கி வெற்றி பெறுவார்கள்;

காமத்தை வென்று விடுவார்கள். சிவபிரான கிய பரம யோகியோ காமத்துக்குப் பிறப்பிடமாகிய காமனேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/123&oldid=680497" இலிருந்து மீள்விக்கப்பட்டது