பக்கம்:சரணம் சரணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சரணம் சரணம்

ஆலுைம் அந்தக் கொடி அந்த மலயை வென்றுவிட்டது; தன் வசமாக்கி அதற்கு அடையாளமாக ஒரு குழந்தை யையும் உண்டாகச் செய்துவிட்டது!

தாயே, நீ செய்த வல்லபம் எவ்வளவு ஆச்சரிய மானது:: என்று வியந்து பாராட்டுகிறார் அபிராமிபட்டர்.

நீசெய்த வல்லபமேi

காமன் அம்பு எய்ததனால் சிவபெருமானுக்கு அம்பி கையோடு ஒன்றுபட வேண்டுமென்ற எண்ணம் தோன்றவில்லே. அப்படியாகுல் காமனுக்கு வாழ்வை யல்லவா தரவேண்டும்? காமன்தான் எரிந்து போேைன! பார்வதி கல்யாணத்தின்போது காமனே இல்லே. அம்பிகைக்குக் காமன் துனே வேண்டுமா? அந்தப் பெரு, மாட்டியின் அழகிலே மயங்கி விட்டார் சிவபெருமான், அம்பிகை அவரைத் தன் வசப்படுத்தி அடங்கும்படி வைத்துவிட்டாள். ஒரு முகத்தையுடைய மாரனை அழித்த, தற்கு வட்டியும் முதலுமாக அபராதம் வாங்குவாரைப் போலே ஆறுமுகமுடைய குமாரனே உண்டாகச் செய்து விட்டாள். மாரனே அழித்த வலிமை அம்பிகையிடம் செல்லவில்லே. மாரனே வென்ற மகாதேவரைக் கொடி போல உள்ள அம்பிகை வென்று விட்டாள். அவள் வல்ல மையை அளவிட்டுக் கூற முடியுமா?

ககனமும் வானும் புவனமும்

காணவிற் காமன்.அங்கம் தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம் முகனும்முந் நான்கிரு மூன்றெனத்

தோன்றிய மூதறிவின் மகனும் உண் டாயதன் ருேவல்லி

நீசெய்த வல்லபமே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/126&oldid=680500" இலிருந்து மீள்விக்கப்பட்டது