பக்கம்:சரணம் சரணம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G - சரணம் சரணம்

இல்லாவிட்டாலும் ஆசை காரணமாக இருக்கலாமே! குழந்தை தாயின்காலைப் பற்றிக்கொண்டு அவள் தோளில் தாவி ஏறலாம் என்று பார்க்கிறது. அதற்குரிய ஆற்றல் அதற்கு இல்லை. ஆலுைம் தாயினிடம் அதற்கு உள்ள ஆர்வம் அதன் உள்ளத்தில் நின்று, தான் செய்ய முடியாத தையும் செய்யத் தூண்டுகிறது. அவ்வாறு அபிராமி பட்டருக்கு ஒர் ஆர்வம் உண்டாகிறது. அதல்ை அவர் ஒரு பற்றுக்கோட்டைப் பெற்றாராம். நான் சிற்றறி வடையவன்; சிறிய ஆற்றலுடையவன்; சிறிய கருவிகளே உடையவன். எனக்கு நின்னுடைய திருவடி பற்றுக் கோடாகக் கிடைத்தது. அதைப் பற்றிக் கொண்டேன்: என்கிறார்,

அேன்னையின் திருவடியைப் பற்றிக்கொள்வதற்கு, அது அத்தனே எளிதானதா? உமக்கு அது இருக்கும் இடம்

தெரியுமா?’ என்று கேட்கிருேம். -

என் அன்னேயின் திருவடி எங்கும் இருக்கிறது. அது பரவாத இடம் ஒன்று இல்லே. எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் அது பயின்று விளங்குகிறது. அதை நான் தேடிப் போக வேண்டியதில்லை. அது எங்கும் மலர்ந்த அடி. ஆதலால் பற்றிக்கொண்டேன்’ என்கிரு.ர்.

பற்றிக்கொள்ளும் அளவுக்கு அது சிறிதாக இருக்குமா? எளிதாக இருக்குமா? .

அது எங்கும் மலர்ந்து பரவியிருந்தாலும் அன்பினுலே பற்றிக் கொள்ளும் அன்பர்களுக்குத் தளிரைப்போல எளி தாக மென்மையாக விளங்குகிறது.

அந்த மலர்ந்த அடியாகிய பல்லவத்தை (தளிரை) அவர் பற்றிக்கொண்டார்; இறுகப் பற்றிக்கொண்டார். கையில் இரண்டு மூன்றுபொருள்களைச் சேர்த்துப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/130&oldid=680505" இலிருந்து மீள்விக்கப்பட்டது