பக்கம்:சரணம் சரணம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தும் விளைவும்

மனிதன் வாழும்பொழுது பல இன்ப துன்பங்களை அநுபவிக்கிருன். அவன் செய்யும் செயல்கள் பல. அவற் றில் நல்ல காரியங்களும் இருக்கின்றன; தீய காரியங்களும் இருக்கின்றன. எல்லாம் விதியின் படியே நடக்கும்: என்று பல சமயங்களில் சொல்லுகிருேம். எல்லாவற்றுக்கும் மூல காரணம் விதி என்றல், நாம் செய்யும் செயல்களில் நமக்கு என்ன உரிமை இருக்கிறது? நாம் செய்ய வேண்டிய கடமை என்று எதைச்சொல்வது? எல்லாம் விதியின் படி நடக்கின்றன என்றால் நாம் வெறும் யந்திரங்களைப்போல இருப்பவர்களாகிருேம். யந்திரத்துக்குப் புண்ணிய பாவம் ஏது? ஏதும் இல்லை. அதுபோலவே நமக்கும் அவை இல்லாமல் தானே இருக்கவேண்டும்?

விதியைப்பற்றி நினைக்கும்போது இப்படிக் குழப்பம் அடைகிறவர்களும், விதி விதி என்று சொல்லிச் சும்மா இருப்பவர்களும் பலர் இருக்கிரு.ர்கள். அப்படியால்ை உண்மைதான் என்ன? விதி என்றும், ஊழ் என்றும் சொல்வது நம்மைக் கட்டுப்படுத்துவது இல்லேயா?

இதைப்பற்றிச் சற்று இங்கே ஆராயலாம்.

நம் வாழ்க்கையில் இன்ப துன்பங்களை அநுபவிக்கி ருேம்; நன்மை தீமைகளைச் செய்கிருேம். அநுபவம் வேறு, செய்கை வேறு. அநுபவிக்கும்போது போக்தா ஆக இருக் கிருேம்; செய்யும்போது கர்த்தா ஆக இருக்கிருேம். நாம் அநுபவிக்கும் அநுபவத்துக்குக் காரணம் முன்வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/136&oldid=680511" இலிருந்து மீள்விக்கப்பட்டது