பக்கம்:சரணம் சரணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தும் விளேவும் 127

அல்லது ஊழ். நாம் இப்போது செய்வன, இனி வரும் அநுபவத்துக்கு வித்தாக இருப்பவை. ஒரு மரத்துக்குக் காரணமாக உள்ளது விதை; அந்த விதையிலிருந்து மரம் வளர்கிறது பிறகு அந்த மரத்திலும் விதைகள் உண்டா கின்றன. மரம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த விதை வேறு; அந்த விதையின் விளைவாக வளர்ந்த மரத் தில் உண்டான விதை வேறு. அவ்வாறே இந்தப் பிறவியில் நாம் அநுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குக் காரணமாக உள்ளது ஊழ் அல்லது விதி; அதன் விளேவை இப்போது அநுபவிக்கிருேம். அப்படி அநுப்வித்துக் கொண்டே புதிய செயல்களைச் செய்கிருேம். அப்படிச் செய்கின்ற செயல்களின் விளைவு பிறகு உண்டாகும்.

இப்போது செய்கின்ற செயல்களுக்குரிய பலன்கள் மூன்று விதம்; அப்பொழுதே உண்டாகும் பயன்; பிறகு இந்த வாழ்நாளுக்குள் உண்டாகும் பயன்; இந்த வாழ்க் கையின் பிறகு அடுத்த பிறவியில் ஏற்ப்டும் பயன். ஒரு முரடைேடு சண்டை செய்கிருேம்; அவனே அடிக் கிருேம்; உடனே நமக்கும் அடிவிழுகிறது. நாயை அடிக்கிருேம்; அது உடனே நம்மைக் கடிக்கிறது. இவை உடனே பயன் கொடுக்கும் செயல்கள். ஒருவன் திருடுகிறன். அதை அப்போது யாரும் கண்டு பிடிக்கவில்லே; போலீஸ்காரர் கள் துப்பறிந்து பிறகு கண்டு பிடிக்கிறார்கள்; சில காலம் கழித்துத் திருடனுக்குத் தண்டனை கிடைக்கிறது. இது சில காலம் கழித்து, இந்தப் பிறவியிலேயே பயனைத் தந்து விடுகிறது. யாரும் அறியாமல் ஒரு பொருளேத் திருடு கிருன் ஒருவன். அந்தத் திருட்டை யாரும் கண்டு பிடிக்க வில்லே. திருடினவன் தண்டனே இல்லாமல் தப்புகிருன். ஆல்ை அந்தச் செயலுக்குரிய தண்டனை வரும் பிறவியில் அவனுக்குக் கிடைக்கும்; அதற்குரிய துன்பத்தை அதுப விப்பான். -

ஆகவே, போன பிறவிகளில் செய்த புண்ணிய பாவங் களின் பயன்களை இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/137&oldid=680512" இலிருந்து மீள்விக்கப்பட்டது