பக்கம்:சரணம் சரணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தும் விளேவும் 12g”

அவர்கள் செய்யும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் பயன் அடுத்த பிறவிகளில் கிடைக்கும். இப்படி வேறு பிரித்துப் பார்த்தால் அவரவர்கள் அநுபவிக்கிற இன்ப துன்பங் களுக்கு நாம் அறியாத காரணம் ஒன்று இருக்கிறது. தெரியவரும்; அதுதான் விதி.

முன்பிறவிகளில் நல்ல காரியங்கள் செய்தவர்கள் இந்தப் பிறவியில் நன்றாக வாழ்கிறர்கள்; அல்லாதவர்கள் துன்புறுகிறர்கள். ‘உலகத்தில் ஏழைகளாக இருப்பவர் களே அதிகம்; பணக்காரர் குறைவுதானே? ஏன் இப்படி?” என்று ஒரு கேள்வி எழுகிறது. அதற்குத் திருவள்ளுவர் விடை கூறுகிறர்; உலகத்தில் நல்ல காரியங்களாகிய தவத்தைச் செய்தவர்கள் குறைவு; செய்யாதவர்களே பலர். அதல்ை இப்படி இருக்கிறது’ என்கிறார்,

இேலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்

சிலர், பலர் நோலாதவர்.??

(உலகத்தில் பொருளும் வசதியும் இல்லாத மக்கள் பலராக இருக்கிறர்கள்; அப்படி இருப்பதற்குரிய காரணம் முன்பிறவியில் தவம் செய்தவர்கள் சிலரே; தவம் செய்யா தவர்களே பலர்.)

இந்த உண்மையை இப்போதுகூடப் பார்க்கலாம். இப்போதும் உலகத்தில் தீமை செய்கிறவர்கள் பலராகத் தானே இருக்கிறார்கள்? அவர்கள் அடுத்த பிறவியில் தம் செயலுக்கு ஏற்ற துன்பத்தை அநுபவிக்கத்தானே வேண்டும்?

ஆகவே, இப்போது நாம் எத்தகைய துன்பத்தை. அதுபவித்தாலும், நன்மையைச் செய்தால் அடுத்த பிறவி யில் நிச்சயமாக நமக்கு இன்ப வாழ்வு உண்டாகும்.

நல்ல செயல்களைச் செய்வது எப்படி? நம்முடைய மனம் தூயதாக இருந்தால் செயல்களும் நல்லவைகளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/139&oldid=680514" இலிருந்து மீள்விக்கப்பட்டது