பக்கம்:சரணம் சரணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 34 சரணம் சரணம்

யைத் துதி செய்ய வேண்டும்; அவளுடைய தோத்திரங் களேச் சொல்ல வேண்டும்.

இந்த உடம்பு நல்ல காரியங்களேச் செய்வதற்குக் கருவியாக இருக்க வேண்டும். கையால் அம்பிகையைத் தொழுது, காலால் அவள் கோயிலே வலம்வந்து. உடம்பால் அவள்முன் வணங்கி வாழவேண்டும். உடம்பில் உள்ள கருவிகளில் செயல் புரிவதற்கு முன் நிற்பது கை, மனித னுக்குத்தான் கைகள் அமைந்திருக்கின்றன. குரங்குக்குக் கை இருந்தாலும் அது பாதி கையாகவும் பாதி காலாகவும் பயன்படுவது. மனிதன் கைதான் வேறு அங்கங்களைப் போல் இல்லாமல் தனிச் சிறப்போடு இருக்கிறது. அந்தக் கைகளால் அம்பிகையைத் தொழ வேண்டும். இது காயத் தால் செய்யும் வழிபாடு.

கைகாள் கூப்பித் தொழிர்: 2 என்று அப்பர் பாடுவார்.

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி: என்பது திருவாசகம். -

இந்த இரண்டுக்கும் மேற்பட்ட செயல் ஒன்று இருக் கிறது; அது மனத்தால் செய்வது, புறத்திலே செய்கிற வழிபாடுகள் யாவும் உள்முகமாகச் செய்வதற்கு உரிய பயிற்சிகளே. அம்பிகையின் திருவுருவத்தைக் கண்ணுரக் காண்கிருேம். அதோடு நின்றால் போதாது. அந்த வடிவத்தை உள்ளத்திலே அமைத்துத் தியானிக்க வேண்டும். புறக்கண்ணில்ை கண்ட அளவிலே நின்று. விட்டால் பயன் இல்லை.

இனிப்புப் பண்டங்கள் விற்கும் கடைக்கு ஒர் ஏழை, போகிருன். அங்கே பல்வேறு வண்ணமும் வடிவும் கொண்ட தின் பண்டங்களே அழகாக அடுக்கி வைத்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/144&oldid=680520" இலிருந்து மீள்விக்கப்பட்டது