பக்கம்:சரணம் சரணம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சரனம் சரணம்

சிவபெருமானிடம் பக்தி பண்ணுத மனம் என்று சொல் வதாக அமைந்தது இந்தப் பாட்டு.

அம்பிகையை முன்பிறவியில் வழிபடாதவர் இப்படி இருப்பார் என்று சொன்னதனலே, வழிபட்டவர் எப்படி இருப்பார் என்பதையும் உய்த்துணரும்படி வைத்திருக் கிறார் அபிராமிபட்டர். முன்பு அம்பிகையை மூன்று. கரணங்களாலும் வழிபட்டுப் பக்தி பண்ணினவர்கள் இப்போது வண்மை புடையவர்களாகி, குலம் கோத்திரச் சிறப்புப் பெற்றவர்களாகி, கல்வியிற் சிறந்தவர்களாக நின்று, நற்குணங்கள் உடையவர்களாகிச் செல்வம் திரம்பிய வாழ்வைப் பெறுவார்கள்’ என்ற கருத்தும் இதஞ்ல் பெறப்படும்.

இது அபிராமி அந்தாதியில் 67-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/150&oldid=680527" இலிருந்து மீள்விக்கப்பட்டது