பக்கம்:சரணம் சரணம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சரணம் சரணம்

பிரபஞ்சம் சுழலுவதே அம்பிகையின் மா பெரும் சக்தி: யினுல்தான். பஞ்ச பூதங்களுக்கும் உள்ள குணங்களைத் தன்மாத்திரைகள் என்று சொல்வார்கள். தன் மாத்திரை கண்ப் புலன்கள் என்று தமிழிற் சொல்வார்கள். பஞ்ச பூதங்களிலும் தன்மாத்திரைகள் பொருந்தியிருக்கின்றன.

ஆகாயத்தில் ஒலியாகிய தன் மாத்திரை இருக்கிறது. காற்றில் ஒலியும் ஊருகிய பரிசமும் இணைந்திருக்கின்றன. கனலாகிய தேயுவில் ஒலியும் பரிசமும் ஒளியும் உள்ளன. புனலாகிய அப்புவில் ஒலியும் பரிசமும் ஒளியும் சுவையும் ஆகிய நான்கு தன்மாத்திரைகளும் பொருந்தியிருக் கின்றன. பிருதுவியில் அந்த நான்கோடு கந்தமாகிய தன் மாத்திரையும் சேர்ந்துள்ளது. இந்தக் கருத்தை மாணிக்க வாசகர் போற்றித் திருவகவலில் சொல்கிறார்.

போரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி:

ஒரு செல்வர் பெரிய மாளிகை கட்டினர். விசிறிகளும் விளக்குகளும் வெந்நீர் உண்டாக்கும் சாதனங்களும் குளிர் பதனக் கருவிகளும் வாங்கிவைத்தார். எல்லாக் கருவிகளும் மிகவும் உயர்ந்த ரகமானவை. மாளிகை கட்டி முடிந்து, எல்லாக் கருவிகளையும் பொருத்திவிட்டார். ஆனல் மின்சார இகணப்புக் கிடைக்கவில்லே. விசிறி ஓடாமல் இருக்கிறது; விளக்கு எரியாமல் இருக்கிறது; வெந்நீர் உண்டாக்கும் கருவி இயங்கவில்லை; நீரை ஏற்றும் குழாய் வேலே செய்ய வில்லை; குளிர்பதனக் கருவியில் குளிர்ச்சி உண்டாகவில்லை. ஒளியைத் தரக் குண்டு விளக்கும் தண்டு விளக்குமாக நிறைய இருந்தன. காற்றைப் பரப்பும் விசிறிகள் அழகழ க்ாகத் தொங்கின. ஒவ்வொரு கருவியும் வெவ்வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/152&oldid=680529" இலிருந்து மீள்விக்கப்பட்டது