பக்கம்:சரணம் சரணம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெறும் செல்வம் 143

வடிவத்தை உடையது. ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்புகளே உடையது. என்றாலும் இவை யாவும் இயங்க வேண்டுமானுல் மின்சாரசக்தி இவற்றில் புகுந்து இயக்க வேண்டும். பார்ப்பதற்கு விசிறி குறையற்ற வடிவை உடையதாக இருந்தாலும் அந்த விசிறியை விசிறி யாக இயங்கச் செய்வது மின்சார சக்திதான். விளக்கை விளக்காக ஒளிவிடக் செய்வதும் அதுவே, மின்சார சக்தி ஒவ்வொரு கருவியிலும் புகுந்துகொண்டு அந்த அந்த அமைப்புக்கு ஏற்ற விாேவை உண்டாக்குகிறது.

இந்த உலகம் முழுவதும் பஞ்சபூதங்களின் கலப்பு. அந்த அந்தப் பூதத்துக்குரிய குணம் உண்டு. அந்தக் குணம் இல்லாவிட்டால் பூதமே இல்லை. உடம்பில் உயிர் இல்லா விட்டால் உடம்புக்கு மதிப்பு ஏது? மின்சக்தி வெவ்வேறு கருவிகளுக்குள் புகுந்து வெவ்வேறு விளைவை உண்டாக்கு கிறது போல அன்னேயாகிய சக்தி மிகவும் நுட்பமான வடிவில் பஞ்சபூதங்களுக்குள் புகுந்து அவற்றை இ’ செய்கிருள். மணம் இல்லாவிட்டால் நிலம் இல்லே. அதற் கென்று அமைந்த தன்மாத்திரை அந்தத் தன் மாத் திரை அதனிடம் பொருந்த வேண்டுமானல் அம்பிகையா கிய சக்தி அதனுள் இணைய வேண்டும். இப்படி ஒவ்வொரு பூதத்திலும் சேர்ந்து சேர்ந்து தன்மாத்திரைகளை இணையும் படி செய்து பூதங்கள் தங்கள் வேலைகளே முறையாக நடத்தும்படி செய்கிருள். அவள் தொடர்பு இல்லாவிட் டால் பூதங்கள் செயற்படுவதில்லை; தன்மாத்திரைகள் அவற்றேடு இணேவதில்லை.

இந்தக் கருத்தை அபிராமி பட்டர் சொல்கிரு.ர்.

பாரும் புனலும் கனலும் வெங் காலும்

படர் விசும்பும்

ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்

சேரும் தலைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/153&oldid=680530" இலிருந்து மீள்விக்கப்பட்டது