பக்கம்:சரணம் சரணம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெறும் செல்வம் 145

சிவகாமசுந்தரியாக எழுந்தருளியிருக்கிருள் என்று தோன்றும்படி, ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாமசுந்தரி’ என்று இனத்துச் சொல்கிரு.ர்.

சிவபெருமானிடத்தில் அன்புள்ள அழகி என்றும், சிவபெருமானுடைய காதலுக்கு இடமான அழகி என்றும் அந்தத் திருநாமத்துக்குப் பொருள் கூறலாம். அம்பிகை அழகிய வடிவம் கொண்டு அடியார்கள் உள்ளத்திலே தியானம் செய்வதற்குரிய நிலையில் எழுந்தருளியிருக் கிருள்.

நுட்பமான நிலையில் எல்லாவற்றையும் இயக்கும் மூலசக்தியாகவும், திட்பமான நிலையில் சிவகாம சுந்தரி யாகவும் எழுந்தருளியிருக்கும் அம்மை, பக்தர்கள் அடைக் கலம் புகும் திருவடிகளே உடையவள். அந்த அடிகள் சிறியவை; சீறடிகள். அந்த அடியைச் சார்வது அடியார் கள் இயல்பு. அடியைச் சார்வதல்ைதான் அடியார்கள் என்ற பெயரைப் பெற்றர்கள். அடியைச் சார்வது என்பது அந்தத் திருவடியைக் கண்ணுல் தரிசித்து, கையால் தொழுது, உடம்பால் வணங்கி, வாயால் புகழ்ந்து, மனத் தால் தியானிப்பது. மனத்தால் தியானிப்பதே தலைமை யானது. மலர் மிசை ஏகினன் மாணடி சேர்ந்தார்’ என்பதன் உரையில், சேர்தலாவது இடைவிடாது தியானித்தல் என்று பரிமேலழகர் எழுதுகிரு.ர். ஆகவே எம்பெருமாட்டியின் திருவடிகளேத் தரிசிப்பதோடு நில்லா மல் அவற்றை உள்ளே வைத்துத் தியானிக்க வேண்டும். அவ்வாறு உள்முகமாகத் தியானம் செய்வதுதான் தவம். அந்தத் தவம் உடையவர்கள் எல்லா விதமான பேறுகளே யும் பெறுவார்கள்.

சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார் படையாத

தனம் இல்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/155&oldid=680532" இலிருந்து மீள்விக்கப்பட்டது