பக்கம்:சரணம் சரணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சரணம் சரணம்

(சிவகாம சுந்தரியின் சிறிய திருவடிகளேச் சாரும் தவம் உடைய பக்தர்கள் தமக்கு உரிமையாகப் பெருத செல்வம் ஏதும் இல்லே.

சீறடி சிறுஅடி, சிறிய அடியைச் சார்வதுவே தவம். அந்தத் தவத்தால் வாராதது ஏதும் இல்லே.)

‘'வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்?? -

என்பது திருக்குறள். தவத்தில்ை நாம் விரும்பும் எல்லா வற்றையும் பெறலாம். அந்தத் தவம் எது? அன்னேயின் திருவடியைச் சார்ந்து அடியாராகும் செயல்தான்.

இதற்கு வேறு ஒரு வகையிலும் பொருள் சொல்ல லாம்; “சீறடியைச் சாருவதற்கு ஏற்ற தவமுடையவர்கள்’ என்றும் பொருள் கொள்ளலாம். முன்பு தவம் செய்திருந் தால்தான் அம்பிகையின் அடியைச் சாரும் நிலை உண்டா கும், யானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்’ என்று மாணிக்கவாசகர் கூறுவது காண்க *கன்னியைக் காணும்.அன்பு, பூணுதற் கெண்ணிய எண்ணமன்றாே முன்செய் புண்ணியமே.” (40) என்றும், ‘புண்ணியம் செய்தனமே........ சென்னியின்மேற் பத்ம பாதம் பதித்திடவே'(41)என்றும் இவ்வாசிரியரே முன்பு பாடியிருக்கிறார், நல்லதவம் செய்தால்தான் அம்பிகைக்கு அடியாராக முடியும். அத்தகைய அடியார்கள் படையாத தனம் இல்லே.

எல்லாச் செல்வத்துக்கும் மேலான செல்வம் மன நிறைவு. “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே?? என்பார் குமர குருபரர். மனத்திலே சாந்தி பெற்றால் அதைவிடச் செல்வம் வேறில்லை. பக்தர்கள் பெறும் செல்வத்துக்குக் கேடு வருவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/156&oldid=680533" இலிருந்து மீள்விக்கப்பட்டது