பக்கம்:சரணம் சரணம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் தரும்

அன்னேயின் திருவடித் தொண்டர்களுக்குக் கிடைக் காத செல்வம் யாதும் இல்லை என்று சொன்ன அபிராமி பட்டர், அவர்கள் பெறும் பேறுகளை விரிவாகச் சொல் வருகிறார், எம்பெருமாட்டியின் கடைக்கண் பார்வையைப் பெற்றவர்கள் என்ன என்ன பயனைப் பெறுவார்கள் என்பதை அடுத்த பாட்டில் விரிவாகச் சொல்கிறார்,

அபிராமி அன்னேயின் கண்கள் கருணைக் கடலாக விளங்குகின்றன; அருள் தரும் ஊற்றாக அடியார்களுக்கு உதவுபவை அவை. அந்தப் பெருமாட்டியின் கடைச்சன் பார்வை ஒருவர்மீது விழுந்தால் அவரிடத்தில் எல்லாவகை யான செல்வங்களும் நிரம்பும். பெருமாட்டியின் கடைக் கண் பார்வையைப் பெறுகிறவர்கள் அவளுடைய அன்பர் களே. மற்றவர்களே அவள் பொதுநோக்கில்ை பார்த்து அவரவர்களுக்கேற்ப வினேப் பயன்களேத் தருவாள். உலகம் எல்லாவற்றையும் பரிபாலிக்கின்ற பெரும் கடமையை உடையவள் ஆதலின் அவரவர்களின் வினேக்கு ஏற்றபடி பயனே நல்கிப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற வள் அன்னே. ஒரு வீட்டிலுள்ள தாய் தன்னுடைய குழந்தை கள் எல்லோருக்கும் வேண்டியவற்றைக்கொடுத்து” “சி காப்பாள். ஆலுைம் அவர்களுக்குள்ளே யாராவது செல்லக் குழந்தையாயிருந்தால் அடிக்கடி அந்தக் குசித் தையின்மேல் தன்னுடைய கடைக்கண் பார்வையை மேவ விடுவாள். மற்றக் குழந்தைகளுக்குச் செய்யும் உபசாரங் களேவிட அதிகமான உபசாரத்தை அந்தக் குழந்தைக்குச் செய்வாள். அதுபோல், எம்பெருமாட்டி பொதுவாக எல்லா உயிர்க் கூட்டங்களுக்கும் வேண்டிய போகங்களேத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/158&oldid=680535" இலிருந்து மீள்விக்கப்பட்டது