பக்கம்:சரணம் சரணம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 சரணம் சாணம்

அவளுடைய அருட்பார்வைக்கு ஆளான அன்பர்கள் முன்பே தவம் செய்திருக்க வேண்டும். அந்தத் தவத்தின் பயனக அன்னேயின் கடைக்கண் பார்வையைப் பெறு கிறார்கள். அந்தப் பார்வையின் விளேவே இம்மையிலும் மறுமையிலும் அவர்கள் பெறும் பேறுகள். என்ன என்ன பேறுகள் பெறுவார்கள் என்பதை ஒருவாறு விரித்துச்

சொல்கிறார் அபிராமி பட்டர்.

இந்த உலகத்தில் வாழ வேண்டுமால்ை பொருள் இன்றியமையாதது.

பொருளிலார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு??

என்பார் வள்ளுவர். அபிராமியின் கடைக்கண் பார்வை பெற்ற அன்பர்கள் இந்த உலகத்தில் நிரம்பிய செல்வத்

தைப் பெறுவார்கள்.

இம்மையே தரும் சோறும் கூறையும்?? என்று சுந்தரமூர்த்திநாயனர் சொல்வார்.

மெண்ணில் நல்லவண்ணம் வாழலாம்?? என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு. -

‘பக்தி பண்ணினுல் மேலுலகத்தில்தான் இன்பம் உண்டாகும். இங்கே எல்லாம் ஒழிந்து நிற்க வேண்டும்’ என்று சிலர் பேசுவார்கள். அது தவருண எண்ணம். இறை வனிடம் உண்டாகும் பக்தியில்ை மனம் பண்பட்டதாகி விடும். அதல்ை எல்லோரும் அவர்களிடத்தில் அன் பாக இருப்பார்கள். அதன் விளைவாகப் பல வகை நன்மை கள் கிடைக்கும். ஆகவே, பக்தி உடையவர்கள் இம்மை வாழ்விலும் நல்ல இன்பங்களைப் பெறுவார்கள்.

அபிராாமியின் கடைக்கண் இன்ன இன்ன பேறுகளேத் தரும் என்று சொல்ல வந்த அபிராமிபட்டர்’ முதல் முதலாக, -

தனம் தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/160&oldid=680538" இலிருந்து மீள்விக்கப்பட்டது