பக்கம்:சரணம் சரணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் தரும் 153.

தூய்மையான உள்ள மும் தூய்மையான பழக்கமும் அவளுடைய அன்பர்களிடத்தில் இருப்பதால் அவர் களுக்கு அழகான வடிவம் உண்டாகும். நெஞ்சில் நிறை வும், எப்போதும் அம்பிகையின் தியானமும் இருப்பதல்ை ஒரு வகையான தேசு உண்டாகும். உள்ளே இருக்கும் தெய்வத்தின் ஒளி புறத்திலே பொசிந்து பொலிவை உண்டாக்கும்.

தெய்வ வடிவும் தரும்

எனச் சொல்கிறார் அபிராமிபட்டர்.

செல்வமும், கல்வியும், திண்ணிய மனமும், அழகிய வடிவும் வந்தால் போதுமா? உலகத்தில் நாம் ஒரு சமுதாயத்தில் வாழ்கிருேம், பலரோடு கலந்து பழகு கிருேம். தனியாக மூக்கைப் பிடித்துக்கொண்டு தவம் செய்து கொண்டிருந்தால் யாருடைய தயவையும் வேண் டாமல் இருக்கலாம். ஆளுல் வாழ்க்கையில் நாம் எந்தனையோ பேரோடு இணைந்து வாழவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நல்லவர்களோடு கூடும்போது நமக்கு நல்லெண்ணங்கள் வளர்கின்றன; நம்முடைய செய்கை கள் நலம் பெறுகின்றன. பொல்லாதவர்களோடு இணங் கும்போது நமக்கு நல்லெண்ணங்கள் தோன்றினுலும் அவை நாளடைவில் மங்கி மடிகின்றன. நல்லினத்தில் சேர்ந்தவர்கள் தொடக்கத்தில் திருந்திய மனம் இல்லாத வர்களாக இருந்தாலும், நல்லவர் இணக்கத்தில்ை நாளடைவில் திருந்துவார்கள். வள்ளுவர் சிற்றினம் சேராமை என்றே ஒர் அதிகாரம் சொல்கிறார்,

சத்சங்கத்தினுல் நம்மிடத்திலுள்ள நல்ல பண்புகள் வளரும்; தீய பண்புகள் மாயும். எத்தனேதான் வனங்கள் இருந்தாலும் தீயவர்களுடைய தொடர்பு இருந்தால் அத்தனே வளமும் பாழாகிவிடும். துன்பமே கடைசியில் நிற்கும். நம்மோடு பழகுகிறவர்கள், நெஞ்சில் வஞ்சம் இல்லாமல் பழகினல் நமக்கு நன்மை உண்டாகும். உள்ளே

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/163&oldid=680541" இலிருந்து மீள்விக்கப்பட்டது