பக்கம்:சரணம் சரணம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் தரும் 155

முதலிய நலங்கள் எல்லாம் ஒருங்கே கிடைப்பது அர்}து. அபிராமியின் கடைக்கண் பார்வைக்குள் அகப்பட்டவர், களுக்கு இந்தப் பேறுகள் கிடைக்கும். அப்படி அவள் பார்வையில்ை நலம் பெறுகிறவர்கள் அவளுட்ைய் அடியார்கள், அன்பர்கள் ஆகியவர்களுக்கே இத்தகைய நன்மைகள் எல்லாம் கிடைக்கும். முதலில் அப்படிச் சொல்லாமல் தனம் தரும் கல்வி தரும்’ என்று தொடங் .கிக் கடைசியில் அன்பர் என்பவர்க்கே? என்று ஏகாரம் போட்டு முடிக்கிறார், அது பிரிநிலை ஏகாரம். இந்த வரிசை யைப் பார்க்கும்போது எல்லாருக்கும் ஆசை உண்டாகும். முதலில் ஆசையைத் தூண்டிவிட்டுப் பின்பு அன்பர் களுக்கே கிடைக்கும் என்று சொன்னதனல், நாமும் அன்பர் ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

அம்பிகையை,

கனம் தரும் பூங்குழலாள் என்று போற்றுகிறார், கனம்-மேகம். மேகம் பேர்ன்ற கரிய நிறமுடைய கூந்தலில் பூவை அணிந்துகொண் டிருப்பவள் அபிராமி. அந்தப் பெருமாட்டியின் கடைக் கண்கள் அன்பர்களுக்கு எல்லா வகையான் நன்மைகளையும் செய்யும், s -

தனம்தரும்; கல்வி தரும்; ஒரு நாளும் தளர்வறியா மனம்தரும்; தெய்வ வடிவும் . .

தரும்; நெஞ்சில் வஞ்சம்இல்லா இனம்தரும்; நல்லன எல்லாம்

தரும்; அன்பர் என்பவர்க்கே, கனம்தரும் பூங்குழ லாள் அபி

ராமி கடைக்கண்களே.

(மேகத்தைப்போன்ற, பூவை அணிந்த குழலேயுடைய அபிராமி அன்னேயின் கடைக்கண்களின் பார்வை அன்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/165&oldid=680543" இலிருந்து மீள்விக்கப்பட்டது