பக்கம்:சரணம் சரணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு கொண்ட அழகு

அம்பிகை உலகில் உள்ள உயிர்களுக்குத் திருவருள் புரிவதற்காகப் பல வகையான திருவுருவங்களை எடுத்து நலம் செய்கிருள்; பல நாமங்களே உடையவளாக விளங்கு கிருள். மிகவும் நுட்பமான வடிவும் அவளுக்கு உண்டு; மிகவும் திட்பமான வடிவும் உண்டு. அணுவுக்கு அனுவாக வம் விபுவுக்கு விபுவாகவும் இருப்பவள் அவள்.

அந்தப் பெருமாட்டி மேற்கொண்ட வடிவங்களில் ஒன்று சியாமளாம்பிகையின் திருவுருவம். அவளைச் சியா மளா என்று லலிதா சகசிரநாமம் கூறும், சியாமனான் பிகையை மகாகவிகாளிதாசர் துதித்துப் பாடிய சியாமளா தண்டகம் என்ற நூல் ஒன்று உண்டு. அதில் அந்த அன்னே யின் வடிவழகையும் இயல்புகளையும் விரிவாகச் சொல் .கிறார்.

அபிராமியின் கடைக்கண் பார்வைக்கு இலக்காகிய வர்கள் பெறும் பயனைப் பாடிய அபிராமிபட்டர் இப் போது தாம் பெற்ற அநுப்வத்தைச் சொல்ல வருகிறார்த அம்பிகை தன்னே உள்ளவண்ணம் அவருக்குக் காட்டியருளி ள்ை. ஆதலின் அவளுடைய எல்லாக் கோலங்களையும் தர் சித்தவர் அவர். புறத்தே விக்கிரக வடிவில் தரிசித்து, உள்ளே தியானம் செய்து, அங்கே உண்மை வடிவில் தகீ சித்து இன்புற்றவர். ‘அந்தர்முக ஸ்மாராத்யா’’ என்று லலிதா சகசிரநாமம் சொல்வதை அவர் அநுபவத்திலே . .356}OT-6l T, -

இதோ தாம் புறம்பும் உள்ளும் தரிசித்த சியாமளாம்பி கையின் திவ்ய தரிசனத்தைச் சொல்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/167&oldid=680545" இலிருந்து மீள்விக்கப்பட்டது